For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மனைவி கேட்ட ஒற்றை உதவி.. வீட்டிற்கு வந்த உடனேயே நிறைவேற்ற சென்ற விராட் கோலி.. புகைப்படங்கள் வைரல்!

மும்பை: வீட்டிற்கு வந்து சேர்ந்தவுடனேயே மனைவிக்காக விராட் கோலி செய்துள்ள விஷயம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அணிகளுக்குள் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால் தொடரில் பங்கேற்றிருந்த அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர்.

கோலி

கோலி

ஆர்சிபி அணியின் பபுளில் இருந்து வெளியேறிய கேப்டன் விராட் கோலி நேற்று மும்பையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். ஆர்சிபி அணியில் எந்த ஒரு வீரருக்கும் கொரோனா உறுதி செய்யப்படாததால் அவர் குவாரண்டைனில் இல்லாமல் நேரடியாக மனைவி மற்றும் குழந்தையுடன் சேர்ந்தார்.

நிவாரண பணி

நிவாரண பணி

இந்நிலையில் வீடு திரும்பிய உடனேயே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். இதற்காக மும்பையை சேர்ந்த யுவசேனா அமைப்பின் உறுப்பினர் ராகுலை, நேரில் சென்று சந்தித்த கோலி, கொரோனா நிவாரணம் திரட்டுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது கொரோனா நிதி திரட்ட பல்வேறு ஐடியாக்களை கோலி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள ராகுல், எங்கள் கேப்டனை சந்தித்தோம். அவர் கொரோனா நிவாரத்திற்காக பணியாற்ற தொடங்கிவிட்டார். அவரின் முயற்சிகள் வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியின் வார்த்தை

மனைவியின் வார்த்தை

முன்னதாக கடந்த மே.2ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்த அனுஷ்கா ஷர்மா, தானும் - கோலியும் இணைந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார். அதனை தற்போது விராட் கோலி செயல்படுத்த தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

Story first published: Thursday, May 6, 2021, 20:43 [IST]
Other articles published on May 6, 2021
English summary
Virat Kohli starts working for COVID-19 relief, Photos Goes viral
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+