Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்.. ரஷீத், கலீல் உடன் சேர்ந்து.. ரம்ஜான் நோன்பு இருக்கும் வார்னர், வில்லியம்சன்.. வைரலான வீடியோ!

சென்னை: ஹைதராபாத் அணியின் ரஷீத் கானுடன் சேர்ந்து கேப்டன் வார்னர், மூத்த வீரர் கேன் வில்லியம்சனும் தற்போது நோன்பு இருந்து வருகிறார்கள்.

ஹைதராபாத் அணி 2021 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தோல்விகளை தழுவி வருகிறது. கடந்த மூன்று போட்டிகளில் நன்றாக ஆடியும், வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட ஹைதராபாத் அணி வரிசையாக தோல்வி அடைந்துவிட்டது.

ஆனால் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தாலும் கூட, அணிக்குள் இருக்கும் வீரர்களுக்கு இடையே நல்ல உறவே நீடித்து வருகிறது. நல்ல குடும்பம் போல சிரித்து பேசி சந்தோசமாக ஹைதராபாத் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

ரம்ஜான்

ரம்ஜான்

இது ரம்ஜான் மாதம் என்பதால் ஹைதராபாத் அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் நோன்பு இருக்கிறார்கள். ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நபி, கலீல் அகமது போன்ற வீரர்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். போட்டி இல்லாத நாட்களில் மட்டுமே இவர் நோன்பு இருக்கிறார்கள்.

நோன்பு

நோன்பு

தீவிர நோன்பிற்கு இடையிலும் கூட இவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கிரிக்கெட் பயிற்சிகளை இவர்கள் விடாமல் மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை வெயிலில் இவர்கள் சாப்பிடாமல் பயிற்சி மேற்கொள்வது கஷ்டம் என்றாலும் கூட தொடர்ந்து நோன்பை கடைபிடிக்கிறார்கள்.

என்ன ஆனது

என்ன ஆனது

இந்த நிலையில் ஹைதராபாத்தின் ரஷீத் கானுடன் சேர்ந்து கேப்டன் வார்னர், மூத்த வீரர் கேன் வில்லியம்சனும் தற்போது நோன்பு இருந்து வருகிறார்கள். அணியில் இருந்து இஸ்லாமிய வீரர்களுடன் சேர்ந்து இவர்களுக்கும் நோன்பு இருக்கிறார்கள். சக வீரர்களுக்கு ஆதரவாக நோன்பை கடைபிடிக்கும் முடிவை இவர்கள் எடுத்துள்ளனர்.

கஷ்டம்

இந்த நோன்பு குறித்து ரஷீத் கான் வெளியிட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. வார்னரும், கேன் வில்லியம்சனும் நோன்பு இருப்பதில் உள்ள சிரமங்களை பகிர்ந்து வருகிறார்கள். நோன்பு இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று இருவரும் விளக்கி உள்ளனர்.

Story first published: Monday, April 19, 2021, 12:37 [IST]
Other articles published on Apr 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+