Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னர் வரை ரீச் ஆன வாத்தி கம்மிங்.. ஹைதராபாத் டீம் வெளியிட்ட செம வீடியோ.. விஜய் பேன்ஸுக்கு சர்ப்ரைஸ்

ஹைதராபாத்: ஹைதராபாத் அணியை வார்னர் உள்ளிட்ட வீரர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

கிரிக்கெட் உலகில் தற்போது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. முதலில் சையது முஷ்டாக் கோப்பை தொடரில் வெற்றிபெற்ற பின் தமிழக வீரர்கள் இந்த பாடலுக்கு நடனம் ஆடினார்கள்.

தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் இந்த பாடலுக்கு நடனம் ஆடியது பெரிய வைரலானது. அதன்பின் வரிசையாக இந்த பாடலுக்கு நடனம் ஆடினார்கள்.

டான்ஸ்

டான்ஸ்

முக்கியமாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சென்னையில் நடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்த பாடலுக்கு நடனம் ஆடினார். பின்னர் குல்தீப் உள்ளிட்ட வீரர்களோடும் இந்த பாடலுக்கு நடனம் ஆடினார்கள். இந்திய வீரர்கள் மத்தியில் வாத்தி கம்மிங் பாடல் மிகவும் பிரபலம் ஆகும்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்திய வீரர்கள் இடையே வைரலாக உள்ள வாத்தி கம்மிங் பாடல் தற்போது வெளிநாட்டு வீரர்கள் இடையிலும் வைரலாகி உள்ளது. ஐபிஎல் ஆட இந்தியா வந்திருக்கும் வெளிநாட்டு வீரர்கள் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர். ஹைதராபாத் அணியை வார்னர் உள்ளிட்ட வீரர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

வார்னர்

வார்னர்

வார்னர், புவனேஷ்வர் குமார், ரஷீத் கான் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ஆடி வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடியுள்ளனர். பொதுவாக டிக்டாக்கில் இப்படி வார்னர் டான்ஸ் ஆடுவது வழக்கம். இந்த வீடியோவில் வார்னர் நடுவில் விஜய் போலவே ஸ்டெப்ஸ் போட்டு வார்னர் ஆடியுள்ளார். ரஷீத் கானும் விஜய் போலவே ஆட முயன்று உள்ளார்.

வைரல்

இந்த வாத்தி கம்மிங் பாடல் தற்போது மொழி, இனம் கடந்த பல்வேறு நாடுகளில் ஹிட் அடித்துள்ளது. வடஇந்தியாவில் பலருக்கு வாத்தி கம்மிங் பாடல் வைரலாக பரவி வருகிறது. முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு இடையே இந்த பாடல் வைரலாகி வருகிறது.

Story first published: Monday, April 12, 2021, 15:48 [IST]
Other articles published on Apr 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+