Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் பதவி மட்டுமல்ல.. மொத்தமாக டீமில் இருந்து தூக்க பிளான்? வார்னருக்கு ஹைதராபாத் பரபர செக்!

ஹைதராபாத்: ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வார்னருக்கு பிளேயிங் 11லும் வாய்ப்பு கிடைக்காது என்று தகவல்கள் வருகின்றன.

ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். வார்னருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து 6 போட்டிகளில் மொத்தம் 5 போட்டிகளில் வார்னர் தலைமையில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. இதனால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அறிக்கை

அறிக்கை

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஹைதராபாத் அணி, மிகுந்த ஆலோசனைக்கு பின் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். இந்த முடிவு எளிதாக எடுக்கப்படவில்லை. வார்னர் ஹைதராபாத் அணிக்காக நிறைய செய்திருக்கிறார், இந்த நிலையில் அணியின் கேப்டனை மாற்றி இருக்கிறோம் என்று ஹைதராபாத் அணி குறிப்பிட்டுள்ளது.

என்ன சொன்னது

என்ன சொன்னது

இந்த அறிக்கையில், ஹைதராபாத் அணியின் வெளிநாட்டு வீரர்கள் காம்பினேஷனை மாற்ற போவதாக ஹைதராபாத் அணி தெரிவித்துள்ளது. இதனால் வார்னருக்கு பிளேயிங் 11லும் வாய்ப்பு கிடைக்காது என்று தகவல்கள் வருகின்றன. அதாவது இவரை அணியில் இருந்தும் நீக்கும் முடிவில் ஹைதராபாத் இருப்பதாக கூறுகிறார்கள்.

 நீக்கம்

நீக்கம்

இவர் மீது அணி நிர்வாகம் மிகுந்த கோபத்தில் உள்ளது. அதனால் ஆடும் அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள். மற்ற வெளிநாட்டு வீரர்கள் அணியில் களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

வாய்ப்பு

வாய்ப்பு

அதன்படி பிரைஸ்டோ, கேன் வில்லியம்சன், ஜேசன் ராய், ரஷீத் கான் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இனி ஆட வாய்ப்புள்ளது. வார்னருக்கு இனி வரும் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்காது. அதோடு இவரை அந்த அணி ரீடெயின் செய்வதும் கடினம் என்று தகவல்கள் வருகின்றன.

Story first published: Saturday, May 1, 2021, 16:45 [IST]
Other articles published on May 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+