சிஎஸ்கே வீரர்கள் சுத்தி நின்னாங்க.. தப்பு பண்ணிட்டேன்.. தவறை ஒப்புக்கொண்ட வார்னர்.. பரபர பேட்டி
சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைய தான்தான் காரணம் என்று ஹைதராபாத் கேப்டன் வார்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.
Recommended Video
நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்தது. இதில் வார்னர் மிகவும் மெதுவாக பேட்டிங் செய்ததும் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.
55 பந்துகள் பிடித்த வார்னர் வெறும் 57 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். இவரின் ஸ்டிரைக் ரேட்தான் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.

வார்னர்
இதை நேற்று வார்னர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அதில், அணியின் தோல்விக்கு நான்தான் காரணம் என்று கூற வேண்டும். என்னுடைய ஆட்டத்திற்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். என்னுடைய ஆட்டம் சொதப்பியதால் அணி தோல்வி அடைந்துவிட்டது. நான் மிகவும் மெதுவாக பேட்டிங் செய்தேன்.

நிறைய பேர்
சுற்றி சுற்றி நிறைய பீல்டர்கள் நின்றார்கள். இதனால் கொஞ்சம் டென்சன் ஆகிவிட்டேன். இதனால் மிகவும் மெதுவாக ஆடினேன். மணீஷ் பாண்டே சிறப்பாக ஆடினார். வில்லியம்சன் எங்கள் அணிக்கு சிறப்பான இலக்கை கொடுத்தார். அணி மோசமாக ஆட நான்தான் காரணம்.

டென்சன்
15 நல்ல ஷாட்களை நான் நேராக பீல்டர்களிடம் அடித்தேன். இங்குதான் நான் சொதப்பினேன். என்னால் அதை மட்டும் மாற்ற முடியவில்லை. நாங்கள் 170 ரன்களை எடுத்து இருந்தோம். இது குறைவான இலக்குதான். நாங்கள் சரியான தொடக்கம் கொடுக்கவில்லை.

வேஸ்ட் செய்துவிட்டேன்
நான் நிறைய பந்துகளை வேஸ்ட் செய்துவிட்டேன். என்னுடைய தவறுக்கு நானே பொறுப்பேற்கிறேன். என்னால் சரியாக கேப்பை பார்த்து அடிக்க முடியவில்லை. இனி வரும் போட்டிகளில் நாங்கள் கவனமாக ஆட வேண்டும், என்று வார்னர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications