Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரிதாபமாக நின்ற வில்லியம்சன்.. பவுண்டரி லைன் அருகே வார்னர் சொன்ன "அந்த" வார்த்தை.. பரபர போட்டோ!

சென்னை: நேற்று மும்பைக்கு எதிரான போட்டியின் போது ஹைதராபாத் கேப்டன் வார்னர் மூத்த வீரர் கேன் வில்லியம்சனிடம் பேசிய விஷயங்கள் வைரலாகி வருகிறது.

2021 ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நேற்று ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை 20 ஓவருக்கு 150/5 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே வார்னர் நிறைய தவறான முடிவுகளை எடுத்தார். நடராஜனை அணியில் இருந்து நீக்கியது. அதன்பின் கேன் வில்லியம்சனை அணியில் எடுக்காதது. மணீஷ் பாண்டேவை மீண்டும் அணியில் எடுத்தது என்று வார்னர் நிறைய தவறுகளை செய்தார்.

அவுட்

அவுட்

நேற்று ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் மிக மோசமாக இருந்தது. வார்னர் அவுட்டான பின் அந்த அணியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் இறங்க நல்ல வீரர்கள் யாருமே இல்லை. இதனால் பாதி ஆட்டத்தில் தோல்வி அடைய போகிறோம் என்று தெரிந்ததும் வார்னர் புலம்ப தொடங்கினார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

மைதானத்தில் மிகவும் அதிர்ச்சியாக வார்னர் காணப்பட்டார். இடையில் பெவிலியனின் உட்கார்த்து தியானம் செய்தார். கண்ணை மூடிக்கொண்டு, கையை கூப்பி கடவுளை வேண்டுவது போல உட்கார்ந்து இருந்தார். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததால், நேற்று போட்டியிலாவது வெல்ல வேண்டும் என்று வார்னர்நினைத்தார்.

இல்லை

இல்லை

பாதி போட்டியில் தோல்வி அடைய போகிறோம் என்று தெரிந்ததும் நேராக வார்னர் கேன் வில்லியம்சனிடம் நேற்று உதவி கேட்டார். பீல்டிங் நிற்க வைப்பதில் வார்னர் ஆலோசனைகளை கேட்டார். ஹைதராபாத் அணியில் வாய்ப்பு கிடைக்காத வில்லியம்சன், பரிதாபமாக நின்று கொண்டு வார்னருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

ஆலோசனை

இதனால் அடுத்த போட்டியில் கண்டிப்பாக வில்லியம்சன் ஹைதராபாத் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வார்னரும் வில்லியம்சனும் இப்படி உரையாடும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இப்படி பாதி போட்டியில் இவரிடம் சென்று ஆலோசனை கேட்பதற்கு அவரை அணியில் எடுத்து இருந்தால் பிரச்சனையே வந்து இருக்காது.

வார்னர்

வார்னர்

வில்லியம்சன் மிடில் ஆர்டரில் இறங்கினால் ஹைதராபாத்தில் சிக்கல் எல்லாம் தீரும். நல்ல வீரரை அணியில் வைத்துக்கொண்டு அவரை எடுக்காமல் இருப்பது தவறு என்று பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

Story first published: Sunday, April 18, 2021, 8:46 [IST]
Other articles published on Apr 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+