Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக தெரிந்துவிடும்.. 2 தமிழக வீரர்களுக்கு இடையில் இன்று "பக்கா" மோதல்.. குறி வைக்கும் கோலி!

சென்னை: கொல்கத்தாவிற்கும் பெங்களூருக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு இடையிலான மோதல் அதிகம் கவனிக்கப்படும்.

கொல்கத்தா அணிக்கும் பெங்களூருக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று சென்னையில் நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வென்று பெங்களூர் அணி வலுவாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் கொல்கத்தா அணி முதல் போட்டியில் வென்றாலும், இரண்டாவது மேட்சில் மும்பை அணியிடம் மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது.

தோல்வி

தோல்வி

இன்று நடக்கும் போட்டியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு இடையிலான மோதல் அதிகம் கவனிக்கப்படும். பெங்களூர் அணியில் இருக்கும் வாஷிங்க்டன் சுந்தர் சென்னை பிட்சில் இன்று கேம் சேஞ்சராக இருக்க வாய்ப்புள்ளது. சென்னை பிட்ச் ஸ்பின் பிட்ச் ஆகும். இங்கு பாதிக்கு மேல் பிட்ச் மொத்தமாக மாறிவிடுகிறது.

சிறப்பு

சிறப்பு

இங்கு நடக்கும் போட்டிகளில் ஸ்பின் பவுலர்கள்தான் மொத்தமாக ஆட்டத்தின் முடிவையே மாற்றுகிறார்கள். மும்பை அணியில் இதே பிட்சில்தான் ராகுல் சாஹர் சிறப்பாக பவுலிங் செய்து மேட்சை மாற்றினார். இன்னொரு பக்கம் இதேபோல்தான் க்ருனால் பாண்டியாவும் நன்றாக பவுலிங் செய்தார்.

பவுலிங்

பவுலிங்

இதனால் பெங்களூர் அணியில் இன்று சுந்தர் அதிக முக்கியத்துவம் பெறுகிறார். சென்னை பிட்சை அவர் எப்படி பயன்படுத்தி ஆட்டத்தை மாற்றுகிறார் என்பதை பொறுத்தே போட்டி முடிவுகள் மாறும். இவருக்கு போட்டியாக கொல்கத்தா அணியிலும் தமிழக வீரர் உள்ளார்.

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி இதே சென்னை பிட்சை பயன்படுத்தி பெங்களூருக்கு நெருக்கடி கொடுப்பார். மிஸ்டிரி ஸ்பின் பவுலரான இவர் சென்னை பிட்சில் நீண்ட வருடம் ஆடிய அனுபவம் கொண்டவர். இதனால் இவர் இன்று கொல்கத்தா அணியின் டிரம்ப் கார்டாக இருப்பார்.

நெருக்கடி

நெருக்கடி

வருண் சக்கரவர்த்தி, சுந்தர் ஆகிய இரண்டு தமிழக வீரர்களும் இந்திய டி 20 உலகக் கோப்பை அணிக்கான ரேஸில் இருக்கும் வீரர்கள். இதனால் இன்று இவர்களுக்கு இடையில் கடுமையான மோதல் இருக்கும். இவர்கள் எப்படி ஆடுகிறார்கள், யார் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே ஆட்டத்தின் முடிவு இருக்கும்.

Story first published: Sunday, April 18, 2021, 11:31 [IST]
Other articles published on Apr 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+