திடீரென புறக்கணித்த கோலி.. ஒரே ஓவர்தான்.. மொத்தமாக பதிலடி கொடுத்த தமிழக வீரர்.. ப்பா தரமான சம்பவம்!
சென்னை: மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் வாஷிங்க்டன் சுந்தர் இன்று சிறப்பாக பவுலிங் செய்தார்.
மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பவுலிங் செய்து வருகிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மும்பை அணி வீரர்கள் அதிரடியாக ஆடி வருகிறார்கள்.
மும்பை அணியின் லின் 49, சூரியகுமார் யாதவ் 31 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்கள். ஒவ்வொரு ஓவருக்கும் 10+ ரன்கள் எடுத்து மும்பை அணி அதிரடி காட்டி வருகிறது.

மும்பை
மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் 12 ஓவர்கள் முடியும் வரை பெங்களூரின் வாஷிங்க்டன் சுந்தரை கோலி களமிறக்கவில்லை. எப்போதும் பேட்டிங் பவர் பிளே முடிந்ததும் சுந்தரை களமிறக்குவதே கோலியின் ஸ்டைல். ஆனால் இன்று வேண்டுமென்றே சுந்தரை கோலி புறக்கணித்தார். அவரை களமிறக்கவே இல்லை.

சாஹல்
சாஹலுக்கு இன்று முன்பே கோலி ஓவர் கொடுத்தார். சாஹல் ரன் கொடுத்தும் கூட அவருக்கு கோலி வாய்ப்பு கொடுத்தார். சபாஷ் அகமது, அகமது பட்டேல் போன்ற வீரர்களுக்கு எல்லாம் கோலி வாய்ப்பு கொடுத்தார். ஆனால் சுந்தருக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கவே இல்லை.

சுந்தர்
ஆனால் 12 ஓவர் முடிந்த பின் 13 ஓவரில் சுந்தருக்கு கோலி வாய்ப்பு கொடுத்தார். சுந்தர் வந்த ஓவரிலேயே சிறப்பாக பவுலிங் செய்தார். தனக்கு வாய்ப்பு கிடைக்காத கோலிக்கு அந்த ஓவரிலேயே பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அச்சுறுத்தி வந்த மும்பை வீரர் கிறிஸ் லின் விக்கெட்டை எடுத்தார்.

விக்கெட்
பவுலிங் லைன் மற்றும் லென்தை மாற்றி, சுந்தர் வீச அதை கணிக்க முடியாமல் லின் சுற்றினார். மிட் விக்கெட் திசையில் போன பந்தை வேகமாக ஓடி போய் சுந்தர் சூப்பர் கேட்ச் பிடித்தார். தனக்கு வாய்ப்பு கொடுக்கப்படாத நிலையில் சிறப்பாக பவுலிங் செய்த சுந்தர் பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications