நீங்கதான் "டிரம்ப்-கார்ட்".. தமிழக வீரருக்கு கோலி கொடுக்க போகும் புரொமோஷன்.. இன்னைக்கு செம டிவிஸ்ட்!
சென்னை: மும்பைக்கு எதிராக இன்று நடக்கும் முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையில் இன்று முதல் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. சென்னையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி நடக்க உள்ளது.
இந்த போட்டிக்காக கடந்த ஒரு வாரமாக இரண்டு அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். சென்னையில் கேம்ப் போட்டு தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எப்படி
இன்று நடக்கும் முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்கிறார்கள். அதன்படி படிக்கல் இன்று ஆடுவது சந்தேகம்தான். படிக்கல் கடந்த வாரம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். இதனால் அவர் பயிற்சி மேற்கொள்ளவில்லை.

பயிற்சி
கிரிக்கெட் பயிற்சி எதுவும் மேற்கொள்ளாமல் ஓய்வில் இருந்தார். தற்போது அவருக்கு கொரோனா குணமாகிவிட்டது. இதனால் மீண்டும் அணியில் இணைந்துவிட்டார். ஆனாலும் கூட இவர் முழு பிட்னசுக்கு திரும்பவில்லை. இதனால் இன்று அவர் ஆடுவது சந்தேகம்தான்.

சந்தேகம்
படிக்கல் ஓப்பனிங் இல்லை என்றால் கோலி என்று ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது. கேரள வீரர் அசாருதீன் உடன் கோலி இன்று ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்தியாவின் டி 20 போட்டி ஒன்றில் கோலி ஓப்பனிங் இறங்கி நன்றாக ஆடினார். இதனால் இன்றுக்கு அவர் ஓப்பனிங் இறங்க வாய்ப்புகள் உள்ளன.

வேறு யார்
இன்னொரு பக்கம் வாஷிங்க்டன் சுந்தருக்கு கோலி ப்ரோமோஷன் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். இதனால் டி வில்லியர்ஸுக்கு அடுத்து சுந்தரை கோலி களமிறக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இவரின் பேட்டிங் பெரிய அளவில் மெருகேறி உள்ளது. கடந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் இவர் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

பேட்டிங்
பெங்களூர் அணியில் நல்ல ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேன் இல்லை. இதனால் மேக்ஸ்வெல், வில்லியர்ஸ் இறங்கிய பின் சுந்தரை கோலி டிரம்ப் கார்ட் போல களமிறக்குவார் என்கிறார்கள். இதனால் அவருக்கு கண்டிப்பாக கோலி பேட்டிங் ஆர்டரில் புரொமோஷன் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது .


Click it and Unblock the Notifications