Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடந்தது என்ன? திடீரென ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய தமிழக வீரர் அஸ்வின்.. இதுதான் காரணமாம்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் திடீரென பிரேக் எடுக்க என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது.

Recommended Video

கொரோனா காலகட்டத்தில் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன்.. IPL-ல் இருந்து Ashwin திடீர் விலகல்

2021 ஐபிஎல் தொடரில் கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் பலர் வெளியேறி வருகிறார்கள். முக்கியமாக ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் வரிசையாக வெளியேற தொடங்கி உள்ளனர்.

ஆண்ட்ரு டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்ஸன் என்று வரிசையாக வீரர்கள் வெளியேறி வருகிறார்கள். இதனால் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

அச்சம்

அச்சம்

இன்னொரு பக்கம் இந்திய வீரர் அஸ்வின் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் டெல்லி அணிக்காக ஆடி வருகிறார். டெல்லி அணியின் மூத்த ஸ்பின் பவுலர் இவர்தான்.

வெளியேறினார்

வெளியேறினார்

நேற்று திடீரென தொடரில் இருந்து பிரேக் எடுக்க போவதாக அறிவித்தார். தனது குடும்ப உறுப்பினர்களின் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்க போவதாக அஸ்வின் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் அஸ்வின் உண்மையில் தொடரில் இருந்து பிரேக் எடுக்க என்ன காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தகவல்

தகவல்

அதன்படி அஸ்வின் தொடக்கத்தில் இருந்தே கொரோனாவிற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முடிவில் இருந்திருக்கிறார். தனது யூடியூப் வீடியோக்களில் இது தொடர்பாக அஸ்வின் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். பல இடங்களில் அஸ்வின் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள்

குடும்ப உறுப்பினர்கள்

இவரின் தூரத்து உறவினர்கள் சிலருக்கும் கொரோனா ஏற்படவே தற்போது மொத்தமாக ஐபிஎல் தொடரில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். இவரின் குடும்ப உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த பிரேக்கை அவர் எடுத்துள்ளார். இவரின் முடிவிற்கு டெல்லி அணி நிர்வாகம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

அஸ்வின் முடிவு

அஸ்வின் முடிவு

தன்னுடைய முடிவு மூலம் மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படும் என்று அஸ்வின் நம்புகிறார். அதேபோல் இப்படிப்பட்ட நேரத்தில் ஐபிஎல் முக்கியம் இல்லை. கொரோனா விழிப்புணர்வுதான் முக்கியம் என்பதால் அஸ்வின் துணிச்சலாக இந்த நல்ல முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள்.

Story first published: Tuesday, April 27, 2021, 13:08 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+