என்ன தோனி இப்ப வந்து இப்படி சொல்றீங்க.. பஞ்சாப்பிற்கு எதிராக இறங்கும் சிஎஸ்கே பிளேயிங் 11.. பின்னணி!
சென்னை: பஞ்சாப்பிற்கு எதிராக இன்று களமிறங்கும் சிஎஸ்கே அணியின் விவரம் வெளியாகி உள்ளது.
Recommended Video
2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று சிஎஸ்கே அணி உறுதியாக உள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே டெல்லியிடம் தோல்வி அடைந்தது.
முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெல்ல முடியும் என்று சிஎஸ்கே நம்பிக்கை வைத்துள்ளது. இதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

பேட்டிங்
கடந்த போட்டியில் சிஎஸ்கேவின் பேட்டிங் நன்றாக இருந்தது. ரூத்துராஜ் சரியாக ஆடவில்லை என்றாலும் அவருக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படும். அதேபோல் டு பிளஸிஸும் இன்று ஆடுவார். பேட்டிங்கில் மாற்றம் இருக்காது.

பவுலிங்
பேட்டிங் ஆர்டர் இறங்கும் விதத்திலும் மாற்றம் இருக்காது. ஜடேஜாவிற்கு பின்பே தோனி களமிறங்குவார். சாம் கரனுக்கு பின் பிராவோ களமிறங்குவார். அதேபோல் மொயின் அலி ஒன் டவுன் இறங்க உள்ளார் என்கிறார்கள்.

மாற்றம் இருக்காது
கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பவுலிங் மோசமாக இருந்தது. ஷரத்துல் தாகூர், சாகர் சரியாக ஆடவில்லை. ஆனால் இன்றும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும், பவுலிங்கில் மாற்றம் செய்யப்படாது என்கிறார்கள்.

கடந்த போட்டி
அதன்படி கடந்த போட்டியில் ஆடிய அதே சிஎஸ்கே அணி இன்றும் ஆடும். டு பிளசிஸ், ரூத்துராஜ், மொயின் அலி, ரெய்னா, ஜடேஜா, அம்பதி ராயுடு, சாம் கரன், தோனி, பிராவோ, சாகர், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் இன்று பஞ்சாப்பிற்கு எதிராக ஆடுவார்கள்.

முடிவு
சிஎஸ்கே அணியில் தோணி மாற்றம் செய்வார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனியோ இண்டன்று காலை டிரெஸ்ஸிங்கில் ரூமில் இதே அணிதான் ஆடும் என்று கூறியதாக தகவல்கள் வருகிறது. சரியாக போட்டி தொடங்குவதற்கு மணி நேரங்களுக்கு முன்தான் தோனி இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் வருகின்றன.


Click it and Unblock the Notifications