Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே கல்லில் 2 மாங்காய்.. தோனி களமிறக்க போகும் டீம்.. ராஜஸ்தானுக்கு எதிராக ஆடும் 11 வீரர்கள் யார்?

சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று சிஎஸ்கே அணியில் ஆட போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

CSK பெரிதும் எதிர்பார்த்த 2 விஷயம்.. Dhoni-க்கு அடுத்தடுத்து பறந்த செய்தி | Oneindia Tamil

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடியுள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தது.

அதன்பின் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்று இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து இன்று சென்னைக்கும் ராஜஸ்தானுக்கும் இடையில் மேட்ச் நடக்கிறது.

மேட்ச்

மேட்ச்

சிஎஸ்கே அணியில் முதல் போட்டியில் பவுலிங் சரியில்லை. முக்கியமாக சாகர், ஷரத்துல் தாகூர் சரியாக பவுலிங் செய்யவில்லை. இது போக வெளிநாட்டு பாஸ்ட் பவுலர்களும் சரியாக ஆடவில்லை. ஆனால் இரண்டாவது போட்டியில் சாகர், பிராவோ, சாம் கரன் எல்லோரும் நன்றாக பவுலிங் செய்தனர்.

சிக்கல்

சிக்கல்

சிஎஸ்கே அணிக்கு இப்போதும் சிக்கலாகி இருப்பது இரண்டு விஷயம்தான். முதல் விஷயம் ஓப்பனிங் வீரர் ரூத்துராஜ். இவர் கடந்த இரண்டு போட்டிகளாக சரியாக ஆடவில்லை. இன்னொரு விஷயம் ஒரு வெளிநாட்டு பாஸ்ட் பவுலர்.

இல்லை

இல்லை

தற்போது சிஎஸ்கே அணியில் தரமான வெளிநாட்டு பாஸ்ட் பவுலர் இல்லை. இந்த இரண்டு பிரச்சனைக்கும் தோனி இன்றைய போட்டிக்கு பின் முற்றுப்புள்ளி வைப்பார் என்கிறார்கள். அதன்படி இன்று ரூத்துராஜ், பிராவோவிற்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுப்பார். இதில் அவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்ப்பார்.

சொதப்பல்

சொதப்பல்

இதிலும் இவர்கள் சரியாக ஆடவில்லை என்றால் அடுத்த போட்டியில் ரூத்துராஜ், பிராவோவிற்கு பதிலாக உத்தப்பா, லுங்கி நிகிடியை தோனி உள்ளே கொண்டு வருகிறார். இன்று நடக்கும் ஒரே போட்டி மூலம் இரண்டு மாங்காய்களை சிஎஸ்கேவில் காலி செய்யும் முடிவில் தோனி இருக்கிறாராம்.

அதே அணி

அதே அணி

இதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே சிஎஸ்கே அணி இன்றும் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டு பிளசிஸ், ரூத்துராஜ், மொயின் அலி, ரெய்னா, ஜடேஜா, அம்பதி ராயுடு, சாம் கரன், தோனி, பிராவோ, சாகர், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் இன்று ராஜஸ்தானுக்கு எதிராக ஆடுவார்கள்.

Story first published: Monday, April 19, 2021, 12:33 [IST]
Other articles published on Apr 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+