Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல நடிகரின் சகோதரியா இவர்?.. தீபக் சஹார் பிரபோஸ் செய்த பெண்ணின் முழு விவரம்!

அமீரகம்: தீபக் சஹார் காதலை வெளிப்படுத்திய பெண்மணி யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 135 ரன்கள் இலக்கினை பஞ்சாப் அணி 13 ஓவர்களிலேயே விரட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்த போதும், அனைவரின் மனங்களை வென்றார் சிஎஸ்கே வீரர் தீபக் சஹார்.

காதல் பிரபோசல்

காதல் பிரபோசல்

நேற்றைய போட்டி முடிந்த பிறகு பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற தீபக் சாஹர் அங்கிருந்த இளம் பெண்ணிடம் திடீரென மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தினார். அவர் கையில் வைத்திருந்த மோதிரத்தை கொடுக்க, அப்பெண்ணும் காதலை ஏற்று மோதிரத்தை அணிந்துக்கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

சிஎஸ்கே கொண்டாட்டம்

சிஎஸ்கே கொண்டாட்டம்

அவர்களுக்கு கிரிக்கெட் அரங்கிலேயே நிச்சயதார்த்தம் நடந்தது போன்று ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த நிகழ்வுக்கு பிறகு சிஎஸ்கே அணியின் ஓய்வறையிலும் கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது. தீபக் சஹாருக்காக கேக் வெட்டி அந்த அணியினர் கொண்டாடினர். இதனை ரசிகர்கள் மீம்ஸுகளை போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

 ரசிகர்கள் தேடல்

ரசிகர்கள் தேடல்

இதுஒரு புறம் இருக்க தீபக் சஹார் காதல் வெளிப்படுத்திய பெண் யார் என்ற விவரத்தை அறிய ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவை தெரியவந்துள்ளது. நேற்று தீபக் சாஹர் ப்ரபோஸ் செய்த பெண்ணின் பெயர் ஜெயா பரத்வாஜ் ஆகும். நீண்ட நாட்களாக நட்பாக பழகி வந்த இவர்கள் இருவரும் தற்போது காதலர்கள் ஆகியுள்ளனர்.

யார் இந்த ஜெயா

யார் இந்த ஜெயா

டெல்லியை சேர்ந்தவரான ஜெயா பரத்வாஜ், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பிரபல பாலிவுட் மாடலான சித்தார்த் பரத்வாஜின் சகோதரி ஆவார். இதே போல தீபக் சஹாரும், பிரபல பாலிவுட் நடிகையான மல்டி சஹாரின் சகோதரர் ஆகும். தீபக் மற்றும் ஜெயா இருவரும் முதலில் நட்பாக பழகி வந்த சூழலில் அது காதலாக மாறியுள்ளது.

சிஎஸ்கே பபுள்

சிஎஸ்கே பபுள்

தீபக் சஹாருடன் சேர்ந்து, கடந்த இரண்டு மாதமாகவே ஜெயாவும் சென்னை அணியின் பயோ பபுளில் இருந்து வருகிறார். அவரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 8, 2021, 21:40 [IST]
Other articles published on Oct 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+