Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை எடுத்ததே தப்பு.. முதல்ல உட்கார வையுங்க.. அதிருப்தியில் சிஎஸ்கே நிர்வாகம்.. மூத்த வீரருக்கு செக்

சென்னை: சிஎஸ்கே அணியில் மூத்த வீரர் ஒருவரை எடுத்தது தவறு என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றது.

நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் பவுலிங் மிக மோசமாக இருந்தது. சிஎஸ்கே பவுலர்கள் யாருமே நேற்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பவுலிங் செய்யவில்லை.

முக்கியமாக சாஹர், பிராவோ ஓவர் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஸ்பின் பவுலர்கள் நினைத்ததை விட நன்றாகவே பவுலிங் செய்தனர். பவுலர்கள் சொதப்பியதால்தான் நேற்று டெல்லியிடம் சிஎஸ்கே அணி சுருண்டது.

பேட்ஸ்மேன்

பேட்ஸ்மேன்

நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கேவில் பேட்ஸ்மேன்கள் அதிகம் இருந்தனர். முக்கியமாக அணியில் பிராவோ இடம்பெற்று இருந்தார். பிராவோவை அணியில் எடுத்தது தவறு என்று பலர் தற்போது விமர்சனங்கள் வைக்க தொடங்கி உள்ளனர். பேட்டிங்கிற்காக அவரை எடுத்துள்ளனர்.

பவுலிங்

பவுலிங்

ஆனால் அவரின் பவுலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. 2018, 2019ல் நிறைய வேரியேஷன்களை பிராவோ வீசினார். ஆனால் இப்போதெல்லாம் அவரின் பவுலிங்கில் வித்தியாசமே இல்லை. ஒரே மாதிரி பவுலிங் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

ஸ்லோ பால்

ஸ்லோ பால்

ஸ்லோ பால் வீசுவதை தவிர பிராவோ பவுலிங்கில் பெரிதாக வித்தியாசம் இல்லை. யார்க்கர், பவுன்சர் எல்லாம் வீசுவதே இல்லை. இவரை அணியில் எடுப்பதால் சிஎஸ்கேவில் வேகமாக வீச கூடிய ஒரு அதிரடி வெளிநாட்டு வீரர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் சிஎஸ்கே அணிக்கு சிக்கலாகி உள்ளது.

ரபாடா

ரபாடா

ரபாடா, பெஹன்டிராப் போன்றவர்கள் இன்னும் சிஎஸ்கே அணியில் இணையவில்லை. அவர்கள் இணைந்ததும் பிராவோவை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. பேட்டிங் ஏற்கனவே நன்றாக இருக்கிறது. பவுலிங்தான் மோசம். உடனே பிராவோவை நீக்க வேண்டும்.

நீக்கம்

நீக்கம்

அவரின் பவுலிங் ஸ்டைல் முன்னேறவே இல்லை என்று நெட்டிசன்கள் பலர் புகார் வைக்க தொடங்கி உள்ளனர். சிஎஸ்கே அணி நிர்வாகமும் இவரின் தேர்வை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள்.

Story first published: Sunday, April 11, 2021, 10:39 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+