Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்பதான திரும்பி வந்தாரு? பாண்டியாவிற்கு வார்னிங் தந்த கோச்.. நேற்று போட்டிக்கு நடுவே நடந்த சம்பவம்

பெங்களூர்: பெங்களூருக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் பாண்டியா மீண்டும் பவுலிங் வீசாமல் இருந்தார்.

ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் ஆட்டமே பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று முடிந்தது. நேற்று வலுவான மும்பை அணியை திரில்லான ஆட்டத்தில் பெங்களூர் வீழ்த்தியது.

நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணி பெங்களூருக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.அதன்பின் களமிறங்கிய பெங்களூர் அணி கடைசி பந்தில் சிங்கிள் அடித்து, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வென்றது.

பாண்டியா

பாண்டியா

நேற்று நடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்யவில்லை. 2019 உலகக் கோப்பைக்கு பின் சர்வதேச போட்டிகளில் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்யவில்லை. 2020 தொடக்கத்தில் இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டிகள் எதிலும் பவுலிங் செய்யாமல் இருந்தார். மருத்துவர் அறிவுரை காரணமாக இவர் பவுலிங் செய்வதை தவிர்த்து வந்தார்.

பவுலிங்

பவுலிங்

2020 ஐபிஎல் தொடர் முழுக்க இவர் பவுலிங் செய்யவே இல்லை. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆஸ்திரேலிய தொடரில் சில ஓவர்களை வீசினார். பின் இங்கிலாந்து தொடரிலும் சில ஓவர்களை வீசினார். 2020 டி 20 உலகக் கோப்பையை மனதில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஓவர் வீச தொடங்கினார்.

ஏன்

ஏன்

இதனால் பவுலிங்கில் பாண்டியா மீண்டும் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெங்களூருக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் பாண்டியா மீண்டும் பவுலிங் வீசாமல் இருந்தார். அணி நிர்வாகம் இவருக்கு கொடுத்த வார்னிங் ஒன்றின் காரணமாகவே இவர் பவுலிங் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

காரணம்

காரணம்

அதன்படி இவருக்கு நேற்று தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பவுலிங் செய்தால் இந்த காயம் பெரிதாகும் என்று இவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே பாண்டியா நேற்று பவுலிங் செய்யவில்லை என்கிறார்கள்.

காயம்

காயம்

நேற்று மும்பை பவுலிங் செய்ய தொடங்கிய போது பாண்டியா ஓவர் போடுவதாகவே இருந்தது. ஆனால் காயம் காரணமாக பாதி ஆட்டத்தில் இந்த முடிவு கைவிடப்பட்டது. இப்போதுதான் காயத்தில் இருந்து திரும்பி வந்து பாண்டியா ஓவர் போட தொடங்கினார். ஆனால் மீண்டும் காயம் அவரை முடக்கி உள்ளது.

Story first published: Saturday, April 10, 2021, 13:41 [IST]
Other articles published on Apr 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+