Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன தப்பு செய்தார்?.. நடராஜனை நீக்கிய வார்னர்.. பின்னணியில் என்ன நடந்தது - இதுதான் காரணம்!

ஹைதராபாத்: ஹைதராபாத் அணியில் இருந்து நடராஜன் இன்று நீக்கப்பட்டுள்ளார். ஆடும் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை டாஸ் வென்றது. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்த தொடரில் இதுவரை டாஸ் வென்ற கேப்டன்கள் எல்லோரும் முதலில் பவுலிங் செய்யவே முடிவு செய்தனர். ஆனால் முதல்முறையாக இன்று ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

நடராஜன்

நடராஜன்

ஹைதராபாத் அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவராக நடராஜன் இருந்தார். கடந்த போட்டியில் கூட நடராஜன் நன்றாக பவுலிங் செய்தார். ஸ்பின் பவுலர்கள் அதிக ரன்களை கொடுத்த போது நடராஜனை அழைத்துதான் வார்னர் ரன்களை கட்டுபடுத்த சொன்னார்.

ஏன்

ஏன்

முதல் போட்டியிலும், இரண்டாம் போட்டியிலும் வார்னர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனாலும் இன்று நடராஜன் ஒதுக்கப்பட்டு இருக்கிறார். வார்னரின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

வார்னர்?

வார்னர்?

நடராஜனுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் வார்னர் அவரை நீக்கி இருக்கலாம் என்கிறார்கள். சென்னை பிட்சில் ஸ்லோ பால் வீச வேண்டும். அதிகமாக கட்டர்களை வீச வேண்டும். கடந்த போட்டியில் கூட நடராஜனிடம் கட்டர்களை வீசும்படி வார்னர் கூறினார்.

சென்னை

சென்னை

ஆனால் சென்னை பிட்ச் நடராஜனுக்கு பெரிதாக ஒத்துழைக்கவில்லை. இதனால் அவரால் பெரிதாக ஆட முடியாது என்பதால் அவரை சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கு மட்டும் அவரை வார்னர் ஒதுக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

காரணம்

காரணம்

பவுலிங் ரீதியாக நடராஜன் தவறு எதுவும் செய்யவில்லை. அவரின் லைன் மற்றும் லென்த் நன்றாகவே இருந்தது. இது தொடர்பாக விளக்கி உள்ள ஹைதராபாத் இயக்குனர் டாம் மூடி, நடராஜனுக்கு ஓய்வு கொடுத்து இருக்கிறோம். தொடர்ந்து பல போட்டிகளில் ஆடி வருவதால் ஓய்வு கொடுத்துள்ளோம், நடராஜனை நீக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Story first published: Saturday, April 17, 2021, 21:08 [IST]
Other articles published on Apr 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+