Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"தேவையே இல்லை".. அஸ்வினை நம்பாத பண்ட்.. முக்கியமான நேரத்தில் ஒதுக்கியது ஏன்? என்ன நடந்தது?

மும்பை: ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று அஸ்வினை ரிஷாப் பண்ட் புறக்கணித்த சம்பவம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Recommended Video

England தொடரில் DRS Review-ல் ஏற்பட்ட குழப்பம் .. Rishabh Pant மீது Ashwin குற்றச்சாட்டு

நேற்று டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் த்ரில் வெற்றிபெற்றது. வெற்றிபெற வாய்ப்பே இல்லாத போட்டியில் ராஜஸ்தானின் கிறிஸ் மோரிஸ் அதிரடியால் கடைசி நேரத்தில் ராஜஸ்தான் வென்றது.

மும்பையில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் 19.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

அஸ்வின்

அஸ்வின்

இந்த போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் டெல்லி அணிக்கு சிறப்பாக பவுலிங் செய்தார். மற்ற டெல்லி வீரர்கள் மிடில் ஓவர்களில் ரன் கொடுத்த போதும் கூட அஸ்வின் நன்றாகவே பவுலிங் செய்தார். நேற்று 3 ஓவர்கள் வீசிய அஸ்வின் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

எத்தனை

எத்தனை

அஸ்வினின் ரன் ரேட் 5க்கும் குறைவாகவே இருந்தது. விக்கெட் விழவில்லை என்றாலும் ரன் செல்வதை கட்டுப்படுத்தினார். நேற்று பிட்ச் கடைசி நேரத்தில் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது. பாதி ஆட்டத்திற்கு மேல் பிட்ச் கொஞ்சம் லேசாக டர்ன் ஆனது.

ஆனால் கொடுக்கவில்லை

ஆனால் கொடுக்கவில்லை

ஆனால் அஸ்வின் நன்றாக பவுலிங் செய்தும் நேற்று பண்ட் அவருக்கு கடைசி ஓவரை கொடுக்கவில்லை. அஸ்வினுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தும் கூட பண்ட் கடைசி மூன்று ஓவர்களில் அவரை பயன்படுத்தவே இல்லை. 18வது ஓவரை டாம் கரன் வீசினார். அதற்கு பின் ரபாடா, பின் மீண்டும் டாம் கரன் என்று பண்ட் ஓவர் கொடுத்தார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அஸ்வினை வேண்டாம் என்று கூறி, பண்ட் நேற்று எடுத்த முடிவு டெல்லி அணிக்கு எதிராக திரும்பியது. கடைசி ஓவரை டாம் கரனுக்கு கொடுக்க, டாம் கரன் இரண்டு சிக்ஸர்களை வாரி வழங்கி ராஜஸ்தானை வெற்றிபெற வைத்துள்ளார். முக்கியமாக அஸ்வினை நம்பாமல் டாம் கரனுக்கு ஓவர் கொடுத்ததே ராஜஸ்தானின் தோல்விக்கு காரணம்.

காரணம் இது

காரணம் இது

அஸ்வினை பண்ட் புறக்கணிக்க டாம் கரண் வீசிய 18வது ஓவர்தான் காரணம். இந்த ஓவரில் டாம் கரன் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால்தான் அஸ்வினை புறக்கணித்துவிட்டு, டாம் கரனுக்கு பண்ட் ஓவர் கொடுத்து இருப்பார் என்று கருதப்படுகிறது.

Story first published: Friday, April 16, 2021, 10:47 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+