பாவம் உயிரை கொடுத்து ஆடினார்.. மூத்த வீரரை உட்கார வைத்த ரோஹித்.. "அந்த" சம்பவத்திற்கு பழிக்கு பழியா?
சென்னை: கொல்கத்தாவிற்கு எதிராக ஆடும் மும்பை அணியில் இன்று டி காக் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்துள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
இன்று ஆடும் மும்பை அணியில் ரோஹித் சார்மா, டி காக், சூரியகுமார், இஷான் கிஷான்., ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, பொல்லார்ட், மார்கோ ஜென்சன், ராகுல் சாகர், டிரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் ஆடுகிறார்.

எப்படி
கடந்த போட்டியில் மும்பை அணியில் கிறிஸ் லின் ஓப்பனிங் இறங்கினார். டி காக் அப்போதுதான் பாகிஸ்தானில் இருந்து வந்திருந்தார். இதனால் அவர் குவாரன்டைனில் இருந்தார். இதையடுத்து குவாரன்டைன் முடிந்து இரண்டு நாட்கள் முன் மும்பை அணியில் இணைந்த டி காக் இன்று ஆடும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு
கடந்த போட்டியில் கிறிஸ் லின் சிறப்பாக ஆடினார். மற்ற வீரர்கள் அவுட் ஆனாலும் கூட லின் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மும்பை அணிக்காக உயிரை கொடுத்து ஆடினாலும் கூட, தற்போது கிரஸ் லின் ஓரம்கட்டப்பட்டுள்ளார்.

காரணம்
கடந்த போட்டியில் ரோஹித் சர்மா ரன் அவுட் ஆக லின்தான் காரணமாக இருந்தார். அப்போதே லின் இதை பற்றி குறிப்பிட்டு இருந்தார். நான் ரோஹித் சர்மா அவுட் ஆக காரணமாக்கிவிட்டேன். எனக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான். சிரித்துக்கொண்டே கிண்டலாக கிறிஸ் லின் குறிப்பிட்டு இருந்தார்.

நடந்து விட்டது
தற்போது லின் கூறியது போலவே அவர் நீக்கப்பட்டுள்ளார். லின்னை ரோஹித் பழிக்கு பழி வாங்கிவிட்டதாக நெட்டிசன்கள் பலர் குறிப்பிட்டு வருகிறார்கள். ஆனால் எப்போதும் மும்பையில் ஓப்பனிங் இறங்க டி காக்தான் முதல் தேர்வு என்பதால் லின் ஓரம்கட்டப்பட்டுள்ளார், இதற்கு பின் வேறு காரணம் எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications