Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போன் செய்து அழைத்தும் வரவில்லை.. சிஎஸ்கேவா வேண்டவே வேண்டாம்.. தெறித்து ஓடிய வீரர்கள்.. என்ன நடந்தது?

சென்னை: சிஎஸ்கே அணி அழைத்தும் கூட சில மூத்த வீரர்கள் அணியில் இணைய விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே அணி கொடுத்த ஆஃபரை சில வீரர்கள் மறுத்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடர் தொடங்கிவதற்கு முன்பே சிஎஸ்கே அணிக்கு முக்கியமான தலைவலி ஒன்று வந்துவிட்டது. மும்பையில் சிஎஸ்கே அணி பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் ஐபிஎல் 2021 தொடரில் இருந்து விலகுவதாக ஹஸல்வுட் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோஸ் ஹஸல்வுட் கடந்த வருடம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக ஆடினார். இந்த நிலையில் இந்த சீசனில் இருந்து வெளியேறி உள்ளார்.

சீசன்

சீசன்

குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும், ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஹஸல்வுட் கூறியுள்ளார். ஆனால் இன்னொரு பக்கம் இவர் கொரோனா விதிகளை பின்பற்ற விரும்பவில்லை.பயோ பபுளில் இருக்க விரும்பவில்லை என்பதால் இப்படி வெளியேறிவிட்டதாக தெரிகிறது.

ஏன்

ஏன்

இந்த நிலையில் ஹஸல்வுட்டுக்கு மாற்று வீரரை சிஎஸ்கே தேடி வருகிறது. இவருக்கு மாற்றாக வெளிநாட்டு பாஸ்ட் பவுலரை களமிறக்க வேண்டும். இதற்காக சிஎஸ்கே சில வீரர்களிடம் பேசி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் பில்லி ஸ்டான்லேக், இங்கிலாந்தின் ரேஸ் டோப்லி ஆகியோரை சிஎஸ்கே தொடர்பு கொண்டுள்ளது.

ஆனால்

ஆனால்

ஆனால் இவர்கள் சிஎஸ்கே அணிக்கு வர முடியாது, ஐபிஎல் தொடரில் ஆட முடியாது என்று அறிவித்துவிட்டனர். இவர்கள் இருவருக்கும் சிஎஸ்கே நிர்வாகம் சார்பாக போன் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வளவு கோடி தருகிறோம், வந்து விளையாட முடியுமா என்று கேட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இந்த அழைப்பை ஏற்கவில்லை.

சிக்கல்

சிக்கல்

கொரோனா பரவல், பயோ பபுள் ஆகியவற்றை காரணம் காட்டி இவர்கள் மறுத்துள்ளனர். இதோடு வேறு சில வீரர்களுக்கும் சிஎஸ்கே சார்பாக போன் செய்து அழைத்து உள்ளனர். அவர்களும் ஐபிஎல் ஆட விருப்பம் இல்லை என்றே கூறியுள்ளனர். ஆனால் இதற்கு கொரோனா காரணம் இல்லை என்று கூறப்படுகிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

அதன்படி சிஎஸ்கேவில் ஹஸல்வுட்டுக்கு மாற்றாகவே இவர்களை எடுக்கிறார்கள். இதனால் கண்டிப்பாக ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காது. இதன் காரணமாக வெறுமனே இந்தியா வந்து வெட்டியாக இருப்பதை இவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.இதனால்தான் சிஎஸ்கேவின் அழைப்பை ஏற்கவில்லை என்று தெரிகிறது.

Story first published: Thursday, April 8, 2021, 9:35 [IST]
Other articles published on Apr 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+