For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேனேஜ்மென்ட்தான் காரணம்.. வார்னரின் அந்த சர்ச்சை பேச்சு..கேப்டன் பதவியை பறித்த ஹைதராபாத்.. பின்னணி!

ஹைதராபாத்: ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டதற்கு பின் என்ன நடந்தது என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.

2021 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி மோசமாக ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இருந்தே அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

இதுவரை 6 போட்டிகளில் ஆடி உள்ள ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த சீசன் அந்த அணிக்கு மோசமாக அமைந்துள்ளது.

தவறு

தவறு

இந்த சீசனில் கேப்டன் வார்னரின் முடிவுகள் எல்லாம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. முக்கியமாக வார்னர் தொடக்கத்தில் கேன் வில்லியம்சனை ஓரம்கட்டியது சர்ச்சையானது. பின்னர் வெளிநாட்டு வீரர்களை அவர் பயன்படுத்திய விதமும் சர்ச்சையானது.

சர்ச்சை

சர்ச்சை

இதனால் வார்னருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையில் மோதல் வந்தது. முக்கியமாக அணி தேர்தல் வார்னருக்கும் மேனேஜ்மென்டிற்கும் இடையில் சண்டை வந்தது. இதையடுத்து தற்போது ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீக்கம்

நீக்கம்

முன்னதாக, தொடர்ந்து மோசமாக சொதப்பி வந்ததால் ஹைதராபாத் அணியில் இருந்து மணீஷ் பாண்டே நீக்கப்பட்டார். இது டேவிட் வார்னரின் விருப்பம் இன்றி நடந்ததாக என்று கூறப்படுகிறது. மணீஷ் பாண்டேயின் நீக்கத்தை வார்னர் விரும்பவில்லை என்கிறார்கள். இதை வார்னரே நேரடியாக குறிப்பிட்டார்.

வார்னர் பேச்சு

வார்னர் பேச்சு

இது குறித்து பேசிய வார்னர், மணீஷ் பாண்டேவை ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை. அவர் நல்ல பேட்ஸ்மேன். தேர்வாளர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை என்று கூறினார். அப்போதே அணி நிர்வாகத்திற்கும் இவருக்கும் இடையில் மோதல் வந்ததாக கூறப்பட்டது.

மோதல்

மோதல்

தற்போது இந்த மோதல் பெரிதாகவே ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்தே வார்னர் நீக்கப்பட்டுவிட்டார் என்கிறார்கள். இந்த மோதல்தான் வார்னரின் நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வார்னரின் முடிவுகளை ஹைதராபாத் அணி நிர்வாகம் விரும்பவில்லை.

 அணி தேர்வு

அணி தேர்வு

முக்கியமாக அவரின் அணி தேர்வை ஹைதராபாத் அணி நிர்வாகம் விரும்பவில்லை. இதனால் அவரை அந்த அணி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. பாதி தொடரில் இப்படி ஹைதராபாத் அணியின் கேப்டன் நீக்கப்பட்டது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Story first published: Saturday, May 1, 2021, 18:17 [IST]
Other articles published on May 1, 2021
English summary
IPL 2021: Why SRH management removes Warner from the captaincy suddenly in the team?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+