ராகுலுக்கு ஒரு சட்டம்.. ரோஹித்துக்கு ஒரு சட்டமா.. போட்டிக்கு நடுவே "பந்தை" மாற்றிய அம்பயர்.. சர்ச்சை
டெல்லி; டெல்லி அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் நடுவர் போட்டிக்கு இடையே பந்தை மாற்றியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
டெல்லிக்கு மும்பைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை 20 ஓவருக்கு 137/9 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மும்பையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது.

எப்படி
இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் பனி அதிகம் பெய்தது. இதனால் இரண்டாவது பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு சாதகமாக பிட்ச் மாறியது. மும்பை பவுலர்களால் சரியாக பவுலிங் செய்ய முடியாமல் கடுமையாக திணறினார்கள்.

திணறல்
முக்கியமாக பாஸ்ட் பவுலர்கள் பந்தை சரியாக பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். பந்து வழுக்கி சென்றதால் ஸ்பின் பவுலர்களாலும் சரியாக வீச முடியவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டனர்.

மாற்றினார்கள்
இதையடுத்து மும்பை அணி வீரர்கள் பந்தை மாற்றும்படி கோரிக்கை வைத்தனர். பந்து ஈரமாக இருக்கிறது. ரொம்ப ஈரமாகி, பிடிக்கவே முடியாத நிலைக்கு சென்றத்துவிட்டது, அதனால் இதை மாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று நடுவர்களும் பந்தை மாற்றினார்கள்.

தவறு
மும்பை வீரர்களின் கோரிக்கையை ஏற்று நடுவர்கள் இப்படி பந்தை மாற்றியது சர்ச்சையாகி உள்ளது. முன்னதாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டன் ராகுல் இதே கோரிக்கையை வைத்த போது நடுவர்கள் அதை ஏற்கவில்லை. ஆனால் இப்போது மும்பை அணியின் கோரிக்கையை மட்டும் ஏற்று பந்தை மாற்றி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.


Click it and Unblock the Notifications