For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பைக்கு மரண கிணறு.. ஸ்பெஷல் வீரரை கையில் எடுத்த கொல்கத்தா.. வாழ்வா சாவா ஆட்டத்தில் ட்விஸ்ட்!

அமீரகம்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்திற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிக முக்கிய மாற்றத்தை கொண்டு வரவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 54வது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இன்று இரவு 7 மணிக்கு சார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டி கொல்கத்தாவுக்கு மிக முக்கியமான போட்டியாகும்.

ப்ளே ஆஃப்

ப்ளே ஆஃப்

புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. 4வது இடத்திற்காக கொல்கத்தா மற்றும் மும்பை அணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கொல்கத்தா அணி தற்போது வரை 12 புள்ளிகளுடனும், +0.294 என்ற நெட் ரன்ரேட்டுடனும் 4வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் ப்ளே ஆஃப்-க்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

மிக முக்கிய போட்டி

மிக முக்கிய போட்டி

ஒருவேளை இந்த போட்டியில் தோல்வியடைந்துவிட்டால், நாளை மும்பை - ஐதராபாத் அணிகளின் போட்டிக்காக காத்திருக்க வேண்டும். அதில் மும்பை தோற்க வேண்டும். அப்படியில்லாமல் மும்பை வெற்றி பெற்றுவிட்டால் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா உள்ளே செல்ல வேண்டியிருக்கும். எனவே இந்த சிக்கலை தவிர்க்க வேண்டும் என்றால் ராஜஸ்தானை எப்படியாவது வீழ்த்தி நேரடியாக உள்நுழைய வேண்டும்.

ப்ளேயிங் 11 மாற்றம்

ப்ளேயிங் 11 மாற்றம்

இந்நிலையில் இந்த போட்டிக்காக தனது ப்ளேயிங் 11ல் முக்கிய மாற்றத்தை கொண்டு வரவிருக்கிறது. கொல்கத்தா அணியின் முதுகெலும்பாக பார்க்கப்படும் ஆண்ரே ரஸல் கடந்த போட்டிகளில் உட்காரவைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சகிப் அல் ஹசன் கொண்டு வரப்பட்டார். ஆனால் இன்று நடைபெறும் வாழ்வா? சாவா ஆட்டத்திற்கு ரஸலை கொண்டு வருகிறது கொல்கத்தா அணி.

என்ன காரணம்

என்ன காரணம்

இன்று போட்டி நடைபெறும் சார்ஜா மைதானம் மிகச்சிறியது ஆகும். இங்கு பிட்ச் எவ்வளவு கடினமாக இருந்தாலும் பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பவர் ஹிட்டர்ஸ் தேவப்படுவார்கள். குறிப்பாக ரஸல் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தால், நிச்சயம் சிக்ஸர்கள் பறக்கும் எனவே ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக ரஸல் ஸ்பெஷலாக கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தான் கடந்த போட்டிகளில் ரஸலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது ராஜஸ்தானை விட மும்பை அணிக்கு தான் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Thursday, October 7, 2021, 19:50 [IST]
Other articles published on Oct 7, 2021
English summary
Will andrew russel returns? KKR making mega Playing 11 against RR in IPL 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+