Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட் கம்மின்ஸால் வந்த சிக்கல்.. ஐபிஎல்-ல் இருந்து வெளியேறுவார்களா அயல்நாட்டு வீரர்கள்.. நிலவும் பதற்றம்!

அகமதாபாத்: பேட் கம்மின்ஸுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் மற்ற அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கொல்கத்தா அணியில் வீரர்கள் சிலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருபப்து ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் உடல்நலக்குறைவு

திடீர் உடல்நலக்குறைவு

கொல்கத்தா அணியின் பபுளில் பாதுகாப்பாக இருந்த வீரர்கள் பலருக்கு ஒருவரின் பின் ஒருவராக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பயிற்சி ஆட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்த பரிசோதனைகளின் முடிவில் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு கொரோனா

வீரர்களுக்கு கொரோனா

சக வீரர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு அறிகுறிகள் மற்றும் கொரோனா உறுதியாக நிலையில் தொடர்பில் இருந்ததற்காக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு வேளை கொரோனா உறுதியானால் மற்ற அயல்நாட்டு வீரர்கள் ஐபில்-ல் தொடர்வது சந்தேகமே ஆகும்.

கவலையில் வீரர்கள்

கவலையில் வீரர்கள்

ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலால் ஆடம் சாம்பா, ஆண்ட்ரே டை, கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட வீரர்கள் சொந்த நாட்டிற்கு சென்றுவிட்டனர். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாட்டிற்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் கவலையில் மூழ்கி உள்ளனர். மே.15ம் தேதி வரை இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்தார். மேலும் வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தார். எனவே வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக வெளியேறிவிடலாம் என்ற எண்ணத்தில் தான் அவர்கள் இருப்பதாக தெரிகிறது.

குழப்பம்

குழப்பம்

எனவே பேட் கம்மின்ஸுக்கு கொரோனா உறுதியானால் சக ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி சொந்த நாட்டிற்கு படையெடுப்பார்கள் எனக்கூறப்படுகிறது. அதே போல கொல்கத்தா அணியில் மேலும் சில வீரர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

Story first published: Monday, May 3, 2021, 17:33 [IST]
Other articles published on May 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+