Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண்ட் மட்டும் அந்த அஸ்திரத்தை எடுத்தால்.. சிஎஸ்கே கதை காலிதான்.. தோனிக்கு செக் வைக்க போகும் சிஷ்யன்!

டெல்லி: இன்று சென்னைக்கு எதிராக களமிறங்கும் டெல்லி அணியில் கேப்டன் ரிஷாப் பண்ட் எந்த இடத்தில் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் 2021 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது. டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் ஆடவில்லை.

இதனால் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷாப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருடம் பண்ட் டெல்லி அணியை எப்படி வழி நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு இதனால் எழுந்துள்ளது.

டெல்லி

டெல்லி

தற்போது நடக்கும் ஐபிஎல் தொடரில் கேப்டன்கள் சிலர் ஓப்பனிங் இறங்க தொடங்கி உள்ளனர். ஒன் டவுன் இறங்கி வந்த கோலி தற்போது பெங்களூர் அணியின் ஓப்பனர் ஆகியுள்ளார். இந்த தொடர் முழுக்க இவர்தான் இனி ஓப்பனிங். அதேபோல் மும்பை அணியிலும் ரோஹித் சர்மாதான் ஓப்பனிங்.

ஓப்பனிங்

ஓப்பனிங்

இன்னொரு பக்கம் கே. எல் ராகுல் பஞ்சாப் அணியில் ஓப்பனிங் இறங்குகிறார். அதோடு ராஜஸ்தான் அணியில் ஒன் டவுன் இறங்கி வந்த சஞ்சு சாம்சன் இந்த சீசனில் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த முறை பண்டும் தன்னை புரோமோட் செய்து டெல்லி அணியில் ஓப்பனிங் இறங்குவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

முதல் தர போட்டிகளில் பண்ட் ஓப்பனிங் இறங்கி இருக்கிறார். ஐபிஎல்லில் பேட்டிங் பவர் பிளேவில் பண்ட் மட்டும் ஓப்பனிங் இறங்கினால் அது டெல்லி அணிக்கு பெரிய அளவில் பலம் கொடுக்கும். டெல்லி அணியில் ஷிகர் தவான் தற்போது ஓப்பனிங் இறங்கி வருகிறார். அவருடன் இறங்கி வந்த ப்ரித்வி ஷா நல்ல பார்மில் இல்லை.

ஷா

ஷா

இதனால் ஷாவிற்கு பதிலாக பண்ட் ஓப்பனிங் இறங்கினால் டெல்லி அணி புதிய பலம் பெறும். அதன்பின் ஸ்மித், ரஹானே, ஸ்டோனிஸ் களமிறங்கலாம். பண்ட் ஒருவேளை ஓப்பனிங் அஸ்திரத்தை எடுத்தால் அது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும். முக்கியமாக பேட்டிங் பவர்பிளேவில் சென்னை அணி 40-50 ரன்களை பொதுவாக விட்டுக்கொடுக்கும்.

மோசம்

மோசம்

இதில் பண்ட் ஓப்பனிங் இறங்கினால் இந்த ரன் அதிகம் ஆகும். தனது குரு தோனிக்கே இன்று பண்ட் செக் வைப்பாரா, தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி சிஎஸ்கேவிற்கு ஷாக் கொடுப்பாரா என்று பார்க்கலாம்.

Story first published: Saturday, April 10, 2021, 15:41 [IST]
Other articles published on Apr 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+