Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருக்குமே "குர்னாலை" பிடிக்காது போல.. டிவிட்டரில் ரகசியமாக திட்டிய யுவராஜ்.. இதை நோட் பண்ணீங்களா?

சென்னை: தீபக் ஹூடாவை பாராட்டி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் செய்துள்ள டிவிட் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் அணிக்கும் ராஜஸ்தானுக்கும் இடையில் நேற்று முதல்நாள் நடந்த போட்டி இப்போதும் பேசு பொருளாக இருக்கிறது. இந்த போட்டியில் பஞ்சாப் 222 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இதில் தீபக் ஹூடா மிகவும் சிறப்பாக ஆடினார். பஞ்சாப் அணியில் தீபக் ஹூடா களமிறங்கிய முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். தொடக்கத்தில் இருந்து வேகம் காட்டிய ஹூடா 27 பந்தில் 64 ரன்கள் எடுத்தார்.

எப்படி

எப்படி

கடந்த ஒரு வருடமாக தீபக் ஹூடா முதல் தர போட்டிகளில் ஆடவில்லை. சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணியால் இவர் புறக்கணிக்கப்பட்டார். அந்த தொடரில் இவர் அணியில் இருந்தே நீக்கப்பட்டார். குர்ணால் பாண்டியாவிற்கும் இவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக மொத்தமாக தீபக் ஹூடா புறக்கணிக்கப்பட்டார்.

குர்ணால்

குர்ணால்

குர்ணால் பாண்டியாதான் அரசியல் செய்து இவரை நீக்கிவிட்டதாக புகார்கள் வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வருட புறக்கணிப்பு அனைத்திற்கும் தீபக் ஹூடா முதல் ஐபிஎல் போட்டியிலேயே பதிலடி கொடுத்துள்ளார். என்னையையே ஓரம் கட்டுகிறீர்களா.. என்னுடைய திறமையை பாருங்கள்.. என்று ஒவ்வொரு பந்திலும் தீபக் ஹூடா சொல்லி சொல்லி அடித்தார்.

குர்ணால்

குர்ணால்

இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் குர்ணால் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசி இருந்தார். புறக்கணிப்பிற்கு இப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டும் என்று தீபக் ஹுதாவிற்கு ஆதரவாக பேசி இருந்தனர். முன்னாள் வீரர் இர்பான் பதான், ஹூடாவின் கடைசி சில மாதங்கள் மோசமாக இருந்தது. அதில் இருந்து மீண்டு வந்து அவர் அதிரடியாக ஆடி உள்ளார் என்று தீபக் ஹூடாவை இர்பான் பாராட்டி இருந்தார்.

பாராட்டு

பாராட்டு

குர்ணால் பாண்டியனை இர்பான் இந்த டிவிட்டில் மறைமுகமாக கிண்டல் செய்து இருந்தார். இந்த நிலையில் தற்போது யுவராஜ் சிங்கும் குர்ணால் பாண்டியாவை மறைமுகமாக தாக்கி உள்ளார்... கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்க சிறந்த வழி.. உங்களின் பேட் பேசுவதுதான் என்று கூறி தீபக் ஹூடாவை பாராட்டி உள்ளார். குர்ணால் பாண்டியாவை கிண்டலடிக்கும் விதமாக யுவராஜ் இப்படி கூறியுள்ளார்.

யாருக்கும்

யாருக்கும்

இப்படி பல வீரர்கள் தீபக் ஹூடாவிற்கு ஆதரவாக பேசி உள்ளனர். குர்ணால் பாண்டியா ஈகோ பிடித்தவர் என்று பலர் ஏற்கனவே புகார் வைத்துள்ளனர். தற்போது முன்னாள் வீரர்களும் தீபக் ஹூடாவிற்கு ஆதரவாக பேசுகிறார்கள். இதனால் குர்ணால் பாண்டியனை முன்னாள் வீரர்கள் யாருக்கும் பிடிக்காதோ என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, April 14, 2021, 16:24 [IST]
Other articles published on Apr 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+