Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை அணிக்கு பெரும் இடி.. போராடி வாங்கிய வீரர் விளையாட மாட்டாராம்.. அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்!

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து முன்னணி வீரர் ஒருவர் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி வரும் மே 29ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டு, அனைத்து அணிகளும் பயிற்சிகளுக்கு ஆயத்தமாகி வருகின்றன.

மும்பைக்கு அதிர்ச்சி

மும்பைக்கு அதிர்ச்சி

இந்த சூழலில் தான் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சி செய்து ஒன்று வந்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணி, இந்த வார இறுதிக்குள் பயிற்சிகளை முழு வீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஜியோ மைதானமும் தீவிரமாக தயாராகி வருகிறது.

 பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

இந்நிலையில் மும்பை அணியின் முன்னணி பவுலரான ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரரான ஆர்ச்சர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக கை மூட்டு பகுதியில் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். சிகிச்சைக்கு பின்னர் களத்திற்கு வந்த போதும் அவரால் முன்பு போன்று வீச முடியவில்லை. இதனால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஏலத்தில் போராட்டம்

ஏலத்தில் போராட்டம்

மெகா ஏலத்தின் போது, முஸ்திவிசூர் ரஹ்மான், ரபாடா, லுங்கி இங்கிடி என பல வீரர்களும் மிகக்குறைந்த விலைக்கு வந்தனர். ஆனால் மும்பை அணி யார் மீதுமே ஆர்வம் காட்டவில்லை. இதனால் ட்ரெண்ட் போல்ட்-ன் இடத்தை பூர்த்தி செய்ய ஆர்ச்சரை தான் வாங்கப்போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி மற்ற அணிகளும் அதிக தொகையை ஏற்றிவிட்டனர்.

Recommended Video

வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. IPL அணிகளுக்கு BCCI புதிய உத்தரவு
மாற்று வீரர்

மாற்று வீரர்

இவ்வளவு சிரமப்பட்டு ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட பவுலர் தற்போது விளையாடவில்லை. இதனால் இனி அவரின் இடத்திற்கு எந்த வீரரை தேர்வு செய்யப்போகிறார்கள் என்ற குழப்பம் எழுந்துள்ளது. பும்ரா - போல்ட் ஜோடி தான் மும்பை அணியின் முதுகெலும்பாக இருந்தது. எனவே அதே போன்ற ஒரு வீரரை மீண்டும் தேட மும்பை ஆரம்பித்துள்ளது.

Story first published: Monday, March 14, 2022, 19:19 [IST]
Other articles published on Mar 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+