Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஓ.. இது வேறு இருக்கா?? ”.. ஐபிஎல் -ல் இன்று ஸ்பெஷல் தினம்.. மும்பை அணிக்கு வெற்றி கஷ்டம் தான்!

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியிலும் மும்பை அணி வெற்றி பெறுவது சற்று சிரமமாகவே உள்ளது.

இன்று மதியம் நடைபெறும் 26வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

மும்பையின் சோகம்

மும்பையின் சோகம்

சரியான பேட்டிங் மற்றும் பவுலிங் படை என இரண்டுமே சரிவர அமையாமல் உள்ள மும்பை அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வென்றால் தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும். எனவே இன்றாவது முதல் வெற்றியை பெற வேண்டும் என முனைப்புடன் உள்ளது.

வெற்றி கடினம்

வெற்றி கடினம்

இந்நிலையில் அது கடினம் தான். ஏனென்றால் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு இன்று ஸ்பெஷல் தினமாகும். கே.எல்.ராகுல் இன்று ஐபிஎல்-ல் தனது 100வது போட்டியில் விளையாடவிருக்கிறார். ஸ்பெஷல் தினங்களின் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் கே.எல்.ராகுல். இன்றும் பெரும் அதிரடிக்காக காத்துள்ளார்.

ராகுலின் ரெக்கார்ட்

ராகுலின் ரெக்கார்ட்

இதுவரை 99 போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 3,405 ரன்களை குவித்துள்ளார். இதில் 28 அரைசதங்களும், 2 சதங்களும் அடங்கும். அவரின் சராசரி 46.01 ரன்கள் என வைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் கே.எல்.ராகுல் நடப்பு சீசனில் தொடர்ந்து சொதப்பி வருவதால், இன்றைய போட்டி திருப்புமுணையாக இருக்கும்.

Recommended Video

IPL 2022 : தோல்விக்கு பின் Rohit Sharma வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. | Oneindia Tamil
 கவனிக்க வேண்டிய விஷயம்

கவனிக்க வேண்டிய விஷயம்

மும்பை இந்தியன்ஸ் அணியில் பவுலிங் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே இன்றைய தினம் அர்ஜுன் டெண்டுல்கரை களமிறக்க ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளார். பவர் ப்ளேவில் இவருக்கும் கே.எல்.ராகுலுக்குமான போட்டி எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Saturday, April 16, 2022, 21:07 [IST]
Other articles published on Apr 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+