Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை செய்த மிகப்பெரிய தவறு..!! கெயீரன் பொல்லார்ட் தலை உருளப் போகிறது.. அடித்துக்கூறும் சீனியர்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது உறுதி என விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா கூறியுள்ளார்

ஐபிஎல் 15வது சீசன் தொடர் போட்டிகளுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் கடைசிகட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

5 முறை சாம்பியன்ஸான மும்பை இந்தியன்ஸ் அணி, எண்ணிக்கையை அதிகரிக்க இம்முறை பல மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது.

மும்பை அணிக்கு பாதிப்பு

மும்பை அணிக்கு பாதிப்பு

அந்த அணியின் முதல் 4 தூண்களாக கேப்டன் ரோகித் சர்மா, கெயீரன் பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அமைந்துள்ளனர். இவர்களை சுற்றி பெரும் இளம் படையை மும்பை அணி நிர்வாகம் மெகா ஏலத்தில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இதில் பெரும் தவறு நடந்துள்ளதாக விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.

பிரச்சினை என்ன?

பிரச்சினை என்ன?

இதுகுறித்து பேசிய அவர், மும்பை அணி நிச்சயமாக ட்ரெண்ட் போல்ட்- ஐ மிஸ் செய்யும். போல்ட் மற்றும் பும்ரா ஜோடி தான் பலமுறை வெற்றிகளை தேடித்தந்துள்ளனர். போல்ட் கடந்த 2020ம் ஆண்டு சீசனில் 25 விக்கெட்களை எடுத்திருந்தார். கடந்த சீசனில் 14 போட்டிகளில் 13 விக்கெட்களை சாய்த்தார். ஆனால் இந்த முறை அவர்களை பிரித்து மும்பை அணி தப்பு கணக்கு போட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்றே எனக்கு புரியவில்லை.

3 மாற்று பவுலர்கள்

3 மாற்று பவுலர்கள்

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ட்ரெண்ட் போல்ட்-ன் இடத்திற்கு ஜெய்தேவ் உனத்கட், டைமல் மில்ஸ், டேனியல் சாம்ஸ் என 3 வீரர்களை மும்பை அணி தேர்வு செய்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு சரியாக வரும் எனத்தெரியவில்லை. உனத்கட்-ஐ அவர்கள் பயன்படுத்தவே அதிக வாய்ப்புள்ளது.

Recommended Video

IPL 2022 Tickets online: Step by Step process | OneIndia Tamil
பொல்லார்ட் காலி

பொல்லார்ட் காலி

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 4 - 5 பேட்ஸ்மேன்கள் போதும், மீதமுள்ள இடங்களுக்கு ஆல்ரவுண்டர்களை வைத்துக்கொள்ள வேண்டும். முதல் 4 வீரர்கள் 20 ஓவர்களை கூட சமாளிக்க முடியவில்லை என்றால், பின்னர் என்ன கிரிக்கெட் இது. இந்த முறை ஆல்ரவுண்டர்களில் மும்பை பலவீனமாக உள்ளது. கெயீரன் பொல்லார்ட் மீது மட்டுமே முழு பொறுப்பும் ஏறவுள்ளது.

Story first published: Saturday, March 19, 2022, 11:21 [IST]
Other articles published on Mar 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+