For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி வரை போராடிய பொல்லார்ட்.. மும்பை அணிக்கு இறுதி ஓவர்களில் சிக்கல்.. லக்னோவிடம் தோற்றது எப்படி??

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கடைசி வரை போராடி மீண்டும் தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

 கே.எல்.ராகுல் சதம்

கே.எல்.ராகுல் சதம்

தொடக்க வீரரும், கேப்டனுமான கே.எல்.ராகுல் இன்று தனது 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடினார். அதற்கேற்றார் போல ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆடினார். 60 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 103 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் குயிண்டன் டிக்காக் 24 ரன்களுக்கு வெளியேறினார்.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

இதன் பின்னர் வந்த வீரர்கள் அதிரடி காட்டி சென்றனர். மணிஷ் பாண்டே 29 பந்துகளில் 38 ரன்களும், தீபக் ஹூடா 8 பந்துகளில் 15 ரன்களையும் விளாசினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்களை மட்டும் இழந்து 199 ரன்களை குவித்தது. மும்பை அணி தரப்பில் உனத்கட் 2 விக்கெட்களும், முருகன் அஸ்வின், ஃபெபியன் ஆலன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். டைமல் மில்ஸ் வெறும் 3 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார்.

ஏமாற்றிய ஓப்பனிங்

ஏமாற்றிய ஓப்பனிங்

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 6 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இஷான் கிஷான் 13 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றினர். இதன் பின்னர் வந்த டெவால்ட் பிரேவிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

மிடில் ஆர்டர் மிரட்டல்

மிடில் ஆர்டர் மிரட்டல்

பிரேவிஸ் 13 பந்துகளில் 31 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 37 ரன்களையும் விளாசினர். இவர்களுக்கு உறுதுணையாக திலக் வர்மா 26 ரன்களை சேர்த்தார். இதனால் 57 - 3 என்று இருந்த ஸ்கோர் 121 - 4 என மாறியது. ஆனால் இதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

தனி நபர் போராட்டம்

தனி நபர் போராட்டம்

மறுமுணையில் ஒற்றையாளாக போராடிய கெயீரன் பொல்லார்ட் 14 பந்துகளில் 25 ரன்களை மட்டும் சேர்த்தும் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து மும்பை அணியால் 181 ரன்களை மட்டுமே எடுத்தது. 18 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியையே தழுவியது. நடப்பு தொடரில் மும்பை அணி பெறும் 6வது தோல்வி இதுவாகும்.

Story first published: Saturday, April 16, 2022, 21:11 [IST]
Other articles published on Apr 16, 2022
English summary
Mumbai Indians vs lucknow ( மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ அணி ) லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கடைசி வரை போராடியும் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+