Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மும்பை ரசிகரா நீங்கள்?? இதை தெரிந்துக்கொள்ளுங்கள்”.. ரோகித்திற்கு உள்ள தலைவலி.. சமநிலை தவறும் அணி!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளேயிங் 11- ஐ தேர்வு செய்வதில் தொடக்கத்திலேயே குழப்பம் நீடித்து வருகிறது.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த முறை 2 குரூப்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதன்படி முதல் போட்டியாக மார்ச் 27ம் தேதி டெல்லியுடன் மோதுகிறது.

புதிய முகங்கள்

புதிய முகங்கள்

ஆனால் அணியின் ப்ளேயிங் 11ல் மிக முக்கியமான குழப்பங்கள் சுற்றி வருகின்றன. அதாவது, சிஎஸ்கே அணி கிட்டத்த பழைய ப்ளேயிங் 11- ஐ மீண்டும் கொண்டு வந்துள்ள சூழலில் மும்பை அணியில் அயல்நாட்டு வீரர்கள், சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் என பல புதிய முகங்கள் வாங்கப்பட்டுள்னர். குறிப்பாக 4 அயல்நாட்டு வீரர்களாக யாரை தேர்வு செய்வது என்பதில் தான் பிரச்சினையே உள்ளது.

2 வீரர்கள் கன்ஃபார்ம்

2 வீரர்கள் கன்ஃபார்ம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் துணைக்கேப்டன் மற்றும் பவர் ஹிட்டரான கெயிரன் பொல்லார்ட் முதல் தேர்வாக தனது இடத்தை பிடித்துவிட்டார். இதே போல முதல் விக்கெட்டிற்காக ஆல்ரவுண்டர் டிம் டேவிட்டும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இதனால் மீதமுள்ள 2 இடங்களுக்கான போட்டி தான் கடுமையாக உள்ளது.

ஆர்சருக்கு மாற்று வீரர்

ஆர்சருக்கு மாற்று வீரர்

ஜோஃப்ரா ஆர்ச்சரால் இந்த முறை விளையாட முடியவில்லை. இதனால் அவரின் இடத்தை நிரப்ப டைமல் மில்ஸ் அணியில் சேர்க்கப்படலாம். ஏனென்றால் மும்பை களங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். எனவே பவர் ப்ளே ஓவரில் 140 கிமீ வேகத்தில் வீசி விக்கெட்கள் எடுக்கும் திறன் கண்டிப்பாக தேவை. அதன்படி பார்த்தால் ஆர்ச்சரின் வேகத்தை போன்றே டைமல் மில்ஸால் வீச முடியும்.

அடித்துக்கொள்ளும் 3 பேர்

அடித்துக்கொள்ளும் 3 பேர்

4வது இடத்திற்கு 3 பேருக்கு இடையே போட்டியுள்ளது. ஆஸ்திரேலிய பவுலர் ரிலே மெரிடித்தின் வேகப்பந்துவீச்சு, மும்பைக்கு நல்ல தொடக்கத்தை தரும். டேனியல் சாம்ஸை எடுத்தால் பவுலிங்கோடு சேர்த்து பேட்டிங்கிலும் நல்ல ஆழம் இருக்கும். இது ஒரு புறம் இருக்க, பாண்ட்யாவை போன்றே அதிரடி காட்டும் டேவால்ட் ப்ரேவிஸ் அணிக்கு தேவையாக இருக்கிறார். இதனால் இவர்கள் மூவரில் யாரை எடுப்பது என ரோகித் சர்மா குழப்பத்தில் உள்ளார்.

Story first published: Friday, March 18, 2022, 14:26 [IST]
Other articles published on Mar 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+