மும்பை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு ?.. தொடர்ச்சியாக 5 தோல்விகள்.. எனினும் பிசிசிஐ தந்த வாய்ப்பு!
மும்பை: பெரும் பின்னடைவில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளெ ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
5 முறை கோப்பைகளை வென்று மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் அந்த மும்பைக்கு இந்தாண்டு படு மோசமாக அமைந்துள்ளது.
4 தோல்விகளை சந்தித்திருந்த மும்பை, நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

மும்பை அணி பரிதாபம்
பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சீரான வேகத்தில் மும்பை சென்றுவிட்டது. எனினும் கடைசியில் ஏற்பட்ட 2 ரன் அவுட்களால் 186 ரன்களை மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்ற முதல் அணியாக மும்பை பெயர் பெற்றுள்ளது.

ப்ளே ஆஃப்
இந்நிலையில் இதன் பிறகும் மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது தான் ஆச்சரியமான ஒன்று. 5 தோல்விகள் மற்றும் -1.072 என்ற மோசமான ரன்ரேட்டுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மீதம் உள்ளன.

வாய்ப்புகள் என்ன
2 குரூப்களாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெறுவதால் குறைந்தபட்சம் 8 போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மும்பை அணி மீதமுள்ள 9 போட்டிகளில் கண்டிப்பாக 8 வெற்றிகளை பதிவு செய்தே ஆக வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல.

காரணம் என்ன
இந்த 9 போட்டிகளிலும் 2 முறை சிஎஸ்கேவை சந்திக்கவுள்ளது. இது தவிர மிகவும் பலமானதாக இருக்கும், லக்னோ, ராஜஸ்தான், குஜராத், கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகளை எதிர்கொள்ள வேண்டும். எனவே மும்பை அணி இந்தாண்டு ப்ளே ஆஃப் செல்வது கூட சிரமமாக தான் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications