Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி சாதனைக்கு ரோகித்தால் ஆபத்து.. டி20 போட்டியில் யார் பெஸ்ட்? நடப்பு ஐபிஎல் சீசனில் தெரிந்துவிடும்

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

மும்பையில் கடந்த 3 நாட்களாக தனிமைப்படுத்தி கொண்ட ரோகித் சர்மா, நேற்று முதல் பயிற்சியை தொடங்கி உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியுடன் வரும் மார்ச் 27ஆம் தேதி மோதுகிறது.

புதிய சாதனை

புதிய சாதனை

ரோகித் சர்மாவும் கடந்த சில போட்டியில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை காட்டவில்லை. இந்த நிலையில், டி20 போட்டிகளில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் டி20 போட்டியில் விளையாடும் ரோகித் சர்மா, 370 போட்டிகளில் விளையாடி 9895 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 6 சதங்கள் அடங்கும்.

முறியடிக்க வாய்ப்பு

முறியடிக்க வாய்ப்பு

தற்போது ரோகித் சர்மா இன்னும் 105 ரன்களை அடித்தால் டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த பட்டியலில் விராட் கோலி 326 போட்டிகளில் விளையாடி 10273 ரன்கள் அடித்து இந்திய வீரர்களில் முதலாவது இடத்தை பிடித்துள்ளார் . இந்த தொடரில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி, விராட் கோலி சொதப்பும் நிலை ஏற்பட்டால், கோலியை ரோகித் சர்மா முந்திவிடுவார்.

அதிக ரன்கள் பட்டியல்

அதிக ரன்கள் பட்டியல்

டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 14562 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதில் 22 சதங்கள் அடங்கும். 2வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 11698 ரன்களும், பொலார்டு 11427 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 10477 ரன்களும்,வார்னர் 10308 ரன்களும், விராட் கோலி 10273 ரன்களும் அடித்துள்ளனர்.

Recommended Video

IPL 2022: Maxwell’s warning for IPL teams, Stress free Virat Kohli very DANGEROUS | Oneindia Tamil
விராட் கோலி

விராட் கோலி

ஒரு வேலை, விராட் கோலி பழைய ஃபார்ம்க்கு திரும்பி, ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டி, வரும் ஐபிஎல் சீசனில் 600 ரன்களை குவித்தால், டி20 வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறிவிடுவார். தற்போது கேப்டன் பதவியும் இல்லாததால், அவருக்கு பேட்டிங்கில் எவ்வித நெருக்கடியும் இருக்காது. இந்தியாவை பொறுத்தவரை டி20 போட்டியில் யார் சிறந்த வீரர்கள் என்று வரும் ஐபிஎல் தொடரில் தெரிந்துவிடும்.

Story first published: Saturday, March 19, 2022, 13:26 [IST]
Other articles published on Mar 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+