
கடினமான இலக்கு
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு ஓப்பனிங் சிறப்பாக இருந்தது ரோகித் சர்மா 48 ரன்கள், இஷான் கிஷான் 43 ரன்களை சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இதன்பின்னர் வந்த டேனியல் சாம்ஸ் (15), திலக் வர்மா (8) என மிடில் அர்டர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 126 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

கடைசி ஓவர் த்ரில்
இனி அவ்வளவு தான் என்ற போது டிம் டேவிட் திடீரென அதிரடி காட்டி வியப்பு ஏற்படுத்தினார். 18 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 ரன்களை குவித்து துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானர். இதனால் கடைசி 12 பந்துகளில் 24 ரன்கள் தான் தேவைப்பட்டது. எனவே மும்பை அணி வெற்றி பெற்றுவிடும் என நினைத்த போது புவனேஷ்வர் குமார் வீசிய 19 ஓவர் மெய்டனாக சென்றது. 20 ஓவரிலும் 15 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
Recommended Video

ரோகித் வேதனை
இந்நிலையில் இந்த தோல்வியால் ரோகித் மீண்டும் அதிருப்தியடைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 19வது ஓவர் வரை வெற்றி பெற்றுவிடுவோம் என நம்பினேன். ஆனால் டிம் டேவிட்டின் ஒரே ஒரு ரன் அவுட் அனைத்தையும் மாற்றிவிட்டது. எல்லாமே சரியாக செய்தோம், எனினும் சொதப்பிவிட்டது. ஐதராபாத் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். நாங்கள் தான் எதிர்காலத்திற்காக சில விஷயங்களை முயற்சி செய்ய வேண்டியுள்ளது.

புதிய முயற்சிகள்
நடப்பு சீசனில் டாப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக எங்கள் தரப்பில் இருந்து அனைத்தும் செய்துவிட்டோம். ஆனால் சூழல் அமையவில்லை.
பந்துவீச்சில் நாங்கள் நிலையான தன்மையில் இல்லை என நினைக்கிறேன். அதனை மாற்றி அமைக்க வேண்டும். நடப்பு தொடரிலேயே ஏதேனும் வாய்ப்பு இருந்தால் புதிய வீரர்களையும் பயன்படுத்தி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











