Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”ஒவ்வொரு போட்டிக்கு பின்பும் மெசேஜ் அனுப்புவார்” சின்ன தல ரெய்னா குறித்து திலக் வர்மா சொன்ன ரகசியம்!

அகமதாபாத்: ஒவ்வொரு போட்டிக்கும் பின்னரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா மெசேஜ் செய்வார் என்று மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனிலேயே மும்பை அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும், நடப்பு சீசனில் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார் திலக் வர்மா. ஐபிஎல் தொடரை மும்பை அணி மோசமாக தொடங்கிய போதும், திலக் வர்மா தனியாளாக நின்று போராடினார். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், ஃபினிஷர் என்று எந்த ரோலில் களமிறங்கினாலும் வெளுத்து வாங்கினார். நடப்பு சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 300 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

IPL 2023: After Every Match, Chinna Thala Suresh Raina text me says Mumbai Player Tilak Varma

இதனால் திலக் வர்மா விரைவில் இந்திய அணிக்காக அறிமுகமாவார் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களும், இந்திய அணியின் கேப்டனுமான ரோகித் சர்மாவும் கூறியுள்ளார். ஐதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த திலக் வர்மா, சிறு வயது முதலே சுரேஷ் ரெய்னாவை போல் விளையாட வேண்டும் என்று கனவு கண்டுள்ளார்.

இந்த நிலையில் திலக் வர்மா அளித்த நேர்காணல் ஒன்றில், பால் பாயாக இருந்த போது முதல்முறையாக சுரேஷ் ரெய்னாவை சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் போதுதான் பார்த்தேன். அவரை சந்தித்து என் கனவை பற்றி பேசிய போது, ரெய்னா எனக்கு விலைமதிப்பற்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கூறினார். இப்போது ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் ரெய்னா எனக்கு மெசேஜ் செய்கிறார். அந்த உணர்வே மகிழ்ச்சியாக உள்ளது.

அதேபோல் ரோகித் சர்மா மற்றும் பொல்லார்ட் இருவரும் பஞ்சாப் அணிக்கு எதிரான் ஆட்டத்திற்கு என்னுடன் அதிக நேரம் செலவிட்டார்கள். ஃபினிஷிங் பற்றியும், அதற்கான திறனை வளர்த்துக் கொள்வது பற்றியும் பேசியதோடு, பயிற்சியும் அளித்தார். அது இனி ஆடப்போகும் போட்டிகளுக்கு எனக்கு அதிக உதவியாக இருக்கும் என்பது நிச்சயம். உலகின் தலைசிறந்த சிக்ஸ் ஹிட்டர்களில் முக்கியமான வீரர் ரோகித் சர்மா. எனக்கு ரோகித் சர்மாவும் சுரேஷ் ரெய்னாவும் தான் ரோல் மாடல் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, May 25, 2023, 23:16 [IST]
Other articles published on May 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+