Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs MI: அய்யயோ.. குட்டி ரெய்னா இல்லையா.. சோகத்தில் மும்பை ரசிகர்கள்.. டாஸ் வென்ற சென்னை பவுலிங்!

சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. நடப்பு சீசனில் வான்கடே நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் மோதிய போது, சென்னை அணி அபார வெற்றியை பெற்றது. இதனால் சேப்பாக்கத்தில் தொடங்கியுள்ள போட்டியில் சென்னை அணிக்கு பதிலடி கொடுக்க மும்பை அணி தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2023: Chennai won the toss and chose to bowl against Mumbai

இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கூறுகையில், மழைக்கு வாய்ப்புள்ளதால் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளோம். அதேபோல் மும்பை வீரர்கள் இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். சில போட்டிகளில் சிறு தவறுகள் நடந்துள்ளது. இனி அனைத்து போட்டிகளையும் சிறப்பாக முடிக்க வேண்டும். கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.

இதனால் சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் மும்பை அணி சார்ப்பாக அதிரடி வீரர் திலக் வர்மா உடல்நிலை பிரச்சனை காரணமாக விளையாடவில்லை. அதேபோல் குமார் கார்த்திகேயா நீக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு பதிலாக ஸ்டப்ஸ் மற்றும் ராகவ் கோயல் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மும்பை அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில போட்டிகளாக மும்பை அணி சேஸிங்கில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால், அந்த அணியின் முதல் பேட்டிங் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

சென்னை அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, அஜிங்கியா ரஹானே, மொயின் அலி, சிவம் துபே, ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சஹர், பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா

மும்பை அணி விவரம்: ரோகித் சர்மா, இஷான் கிஷன், க்ரீன், சூர்யகுமார் யாதவ், ட்ஸப்ஸ், டிம் டேவிட், நேஹல் வதேரா, ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான்

Story first published: Saturday, May 6, 2023, 15:08 [IST]
Other articles published on May 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+