For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை Vs மும்பை அணிகள் ஆட்டம் ரத்தாக வாய்ப்பு.. சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு.. கொடுமை

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை மிக முக்கிய ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மதியம் 3.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகின்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே மும்பை அணிக்கு சாதகமாக தான் அமைந்திருக்கிறது.

 IPL 2023 - CSK vs MI match might affected by rain in chepauk

இதனால் நாளை ஆட்டத்தில் வெற்றி பெறப்போவது யாரு என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எஞ்சிய 4 ஆட்டத்தில் மூன்றிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். ஏற்கனவே லக்னோக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டமும் மழையால் ரத்தாக வாய்ப்புள்ளது.

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளை ஒரு வேலை போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்படும். ஏற்கனவே சென்னை அணிக்கு ஒரு புள்ளிதான் கடந்த போட்டியில் இருந்து கிடைத்தது.

தற்போது மீண்டும் ஒரு புள்ளி தான் கிடைக்கும் பட்சத்தில் சிஎஸ்கே அணி அடுத்த மூன்று ஆட்டத்திலும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இந்த நிலையில் மும்பை அணி பேட்டிங் சூப்பராக கிளிக்காகிவிட்டது. அவர்கள் கடந்த இரண்டு ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் இலக்கை வெற்றிகரமாக துரத்தி இருக்கிறார்கள். இதனால் டாஸ் வெல்லும் பட்சத்தில் சிஎஸ்கே அணி பந்துவீசி சேஸிங்கில் துரத்தினால் மட்டுமே சரியாக இருக்கும்.

 IPL 2023 - CSK vs MI match might affected by rain in chepauk

இல்லையென்றால் சிஎஸ்கே எந்த இலக்கு என்று நினைத்தாலும் அதனை வெற்றிகரமாக மும்பை அணி வீரர்கள் துரத்தி விடுவார்கள். சிஎஸ்கே அணியில் மகீஷ் தீக்ஷனாவுக்கு பதில் சாண்டனரை கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை தோனி கேட்க மாட்டார் என்று நாம் அனைவருக்கும் தெரிந்ததே. சிஎஸ்கே வீரர்கள் பேட்டிங்கில் பெரிய ரன்கள் அடித்தால் மட்டுமே ஓரளவு மும்பை அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

Story first published: Friday, May 5, 2023, 17:24 [IST]
Other articles published on May 5, 2023
English summary
IPL 2023 - CSK vs MI match might affected by rain in chepauk சென்னை Vs மும்பை அணிகள் ஆட்டம் ரத்தாக வாய்ப்பு.. சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு.. கொடுமை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+