டெல்லி : ஐபிஎல் 16வது சீசனில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வருகின்றனர். மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், தற்போது டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்துவீசி வருகிறது.
தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா அதிரடியாக விளையாட முயற்சித்தார். 3 பவுண்டரிகளை அடித்த நிலையில், 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த போது கேமிரான் கிரீனின் அபார கேட்சால் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, டேவிட் வார்னர் மற்றும் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வந்தனர்.

டேவிட் வார்னர் இந்த சீசனில் அதி ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் போட்டி போட்டு கொண்டு இருக்கிறார். டேவிட் வார்னர் அதிக ரன்களை டெல்லி அணிக்காக எடுத்தாலும், அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 116 என்ற அளவில் உள்ளது. இது அவருக்கும், டெல்லி அணிக்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ஹிர்திக் சோகின் பந்துவீசும் போது நோ பால் வீசினார். இதனையடுத்து டேவிட் வார்னருக்கு ஃபிரி ஹிட் கிடைத்தது. ஆனால் இந்த சீசனில் வேகமாக ரன் சேர்க்க தடுமாறிவருகிறார். இதனால் விரக்தி அடைந்த டேவிட் வார்னர், ப்ரி ஹிட்டில் கேட்ச் ஆனால் அவுட்டாக மாட்டோம் என்பதை உணர்ந்து, வலது கை பேட்ஸ்மேனாக நின்றார்.
இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. வலது கை பேட்ஸ்மேனாக வார்னர் தூக்கி அடிக்க பந்து, 30 மீட்டர் சர்கிள் வெளியேவே விழுந்தது. தொடர்ந்து வார்னர் வேகமாக ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். வார்னரின் இந்த மெதுவான ஆட்டத்தால், எதிர் முனையில் நிற்கும் வீரர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது.