For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த டெல்லி.. 22 பந்தில் அக்சர் பட்டேல் அரைசதம்.. மும்பை அணி அபாரம்

டெல்லி : ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் இன்று மும்பை அணியும், டெல்லி அணியும் மோதி கொண்டன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, டெல்லி அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தார்.

ஒரு முனையில் டேவிட் வார்னர் பொறுமையாக ஒநாள் கிரிக்கெட்டில் ரன் சேர்ப்பது போல் தடுமாறினார். இதனால் எதிர்முனையில் நின்ற பேட்ஸ்மேனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. மணிஷ் பாண்டே 26 ரன்களும் யாஷ் துல் 2 ரன்களிலும் வெளியேறினர்.

IPL 2023 - Delhi capital collapsed at end after axar patel heroics

அதிரடியாக ஆடக் கூடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் போவெல் 4 ரன்களிலும், லலித் 2 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, டேவிட் வார்னர் மட்டும் ஆமை வேகத்தில் 43 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஒரு கட்டத்தில் தட்டு தடுமாறிய டெல்லி அணியை அக்சர் பட்டேல் காப்பாற்றினார்.

தொடக்கத்தில் இருந்தே மும்பை அணியின் பந்துவீச்சை அக்சர் பட்டேல் சிதறடித்தார். 5 சிக்சர், 4பவுண்டரிகளை விளாசிய அக்சர் பட்டேல் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால் டெல்லி அணி 190 ரன்களை தொடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,அப்போது தான் எதிர்பாராத சரிவு ஒன்று நிகழ்ந்தது.

IPL 2023 - Delhi capital collapsed at end after axar patel heroics

அக்சர் பட்டேல் 54 ரன்களில் பெகுரண்டர்ப் பந்துவீச்சில் வெளியேற, அந்த ஓவரில் மட்டும் ரன் வுட் உட்பட 4 விக்கெட்டுகளை டெல்லி அணி இழந்தது. இதனால் 165 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்த டெல்லி அணி கடைசி 7 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாறியது.இதனையடுத்து 190 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட டெல்லி 172 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

Story first published: Tuesday, April 11, 2023, 21:37 [IST]
Other articles published on Apr 11, 2023
English summary
IPL 2023 - Delhi capital collapsed at end after axar patel heroics
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+