For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிளே ஆப் சுற்றில் சொதப்பிய ரோகித்..நாக் அவுட் ஆட்டத்தில் வந்த வேகத்தில் சென்றார்..கடுப்பான ரசிகர்கள்

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையரில் குஜராத்தை எதிர்கொள்ளும். தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும்.

இதனால் இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து மோசமாக விளையாடி வருவது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

IPL 2023 Eliminator - Rohit sharma again failed in important match vs lsg

லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 313 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும். அதுவும் கடைசி மூன்று ஆட்டத்தில் தான் 29, 37,56 ரன்கள் என அடித்து இருந்தார். அதற்கு முன் அவருடைய ஸ்கோர் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது. எனினும் மற்ற ஸ்டார் வீரர்கள் எல்லாம் 400, 500 ரன்கள் அடித்திருக்கும் நிலையில் ரோகித் சர்மா கடந்த சில சீசன்களாகவே சராசரியான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வருகிறார்.

ரோகித் சர்மா ஐபிஎல் பிளே ஆப் இல் இதுவரை 20 இன்னிங்ஸில் 308 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் சராசரி 15 என்ற அளவில் தான் இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 106 ஆகும். இதனால் இந்த ரெக்கார்டை ரோகித் சர்மா இம்முறை மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. விளையாடிய 10 பந்தில் அவர் ஒரு சிக்சர் ,ஒரு பவுண்டரி அடித்தார். மற்ற எட்டு பந்தில் ஒரு சிங்கிள் 7 டாட் பாஸ் ஆகும். எனினும் ரோகித் சர்மா 11 ரன்களில் வெளியேறினார்.

இது மும்பை அணியின் ரன் வேகத்தை குறைத்தது. ரோகித் சர்மா தொடர்ந்து முக்கியமான ஆட்டத்தில் சொதப்பி வருவது மும்பை அணி ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய அணி ரசிகர்களையும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலாவது ரோகித் சர்மா அணிக்கு உதவுமாறு ரன் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Wednesday, May 24, 2023, 20:33 [IST]
Other articles published on May 24, 2023
English summary
IPL 2023 Eliminator - Rohit sharma again failed in important match vs lsg பிளே ஆப் சுற்றில் சொதப்பிய ரோகித்..நாக் அவுட் ஆட்டத்தில் வந்த வேகத்தில் சென்றார்..கடுப்பான ரசிகர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+