Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”என்னய்யா.. இப்படி அடிக்கிறாரு” 20 பந்துகளில் அரைசதம்.. லக்னோவை மிரளவைத்த சாஹா!

அகமதாபாத்: குஜராத் அணியின் தொடக்க வீரர் சாஹா 20 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

16வது ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து வலிமை வாய்ந்த அணியான லக்னோ அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் க்ருனால் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். லக்னோ அணியில் நீண்ட நாட்களுக்கு பின் டி காக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் நவீன் உல் ஹக் நீக்கப்பட்டுள்ளார்.

IPL 2023: GT wicket keeperWridhhiman Saha Smashed 52 from just 20 balls against Lucknow at Ahmedabad

இந்த நிலையில் குஜராத் அணி சார்பாக வழக்கம் போல் சாஹா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே அதிரடியாக தொடங்கிய சாஹா, இரண்டாவது ஓவரிலேயே சிக்சரை விளாசி அசத்தினார். இதையடுத்து மோசின் கான் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 22 ரன்களை சாஹா விளாசினார். இதையடுத்து க்ருனால் பாண்டியா வீசிய 5வது ஓவரில் சிக்சர் அடித்து சுப்மன் கில்லும் அதிரடிக்கு கியரை மாற்றினார்.

இதையடுத்து 5வது ஓவரில் முதல் பந்திலேயே சிக்சர் விளாசி சாஹா, 20 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதில் மொத்தமாக 4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளும் அடங்கும். ஒரு பக்கம் சுப்மன் கில்லை நிறுத்தி வைத்து சாஹா பட்டாசு போல் வெடிப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் அதிரடியான ஆட்டத்தால் குஜராத் அணி பவர்பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் குவித்தது.

Story first published: Sunday, May 7, 2023, 16:35 [IST]
Other articles published on May 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+