Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மினி சேப்பாக்கம் பிட்ச் போல.. சுழலில் சிக்கி தவித்த குஜராத்.. லக்னோ அணிக்கு 136 ரன்கள் இலக்கு!

லக்னோ: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற 136 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குஜராத் அணி சார்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 66 ரன்கள் சேர்த்தார்.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். குஜராத் அணி சார்பாக சாய் சுதர்சன், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் நீக்கப்பட்டு விஜய் சங்கர் மற்றும் நூர் அஹ்மத் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குஜராத் அணி சார்பாக சுப்மன் கில் - சாஹா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

IPL 2023: Gujarat Titans set a target of 136 runs for Lucknow Super Giants to win in IPL 2023

முதல் ஓவரை நவீன் உல் ஹக் பந்துவீச, 2வது ஓவரிலேயே க்ருணால் பாண்டியாவை லக்னோ அணி அட்டாக்கில் கொண்டு வந்தது. அதற்கேற்ப குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா - சாஹா கூட்டணி சேர்ந்தது. நிதானமாக ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், குஜராத் அணி 10 ஓவர்கள் முடிவில் 71 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஒருபக்கம் சாஹா வேகமாக ரன்கள் சேர்த்தாலும், ஹர்திக் பாண்டியா நிதானமாக ஆடி வந்தார்.

இந்த நிலையில் 11வது ஓவரில் சாஹா 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த அபினவ் மனோகர் 3 ரன்களிலும், விஜய் சங்கர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் குஜராத் அணி 15 ஓவர்கள் முடிவில் 92 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக ஆட வேண்டிய நிலைக்கு குஜராத் அணி தள்ளப்பட்டது. அதற்கேற்ப களத்தில் ஹர்திக் பாண்டியா - மில்லர் இருந்தனர். தொடர்ந்து 17வது ஓவர் வரை அடக்கி வாசித்த ஹர்திக் பாண்டியா, 18வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார்.

IPL 2023: Gujarat Titans set a target of 136 runs for Lucknow Super Giants to win in IPL 2023

அந்த ஓவரில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்களை குஜராத் அணி சேர்த்தது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவும் அரைசதம் கடந்தார். பின்னர் நவீன் உல் ஹக் வீசிய 19வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. பின்னர் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா 66 ரன்களில் ஆட்டமிழக்க, 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து கடைசி பந்தில் மில்லர் விக்கெட்டையும் ஸ்டாய்னிஸ் வீழ்த்தினார். இறுதியாக குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

Story first published: Saturday, April 22, 2023, 17:24 [IST]
Other articles published on Apr 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+