மும்பை : ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக மும்பை அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயிததுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தடுமாறினாலும், 20 வயதான திலக் வர்மா மரண இன்னிங்ஸ் ஆடினார். டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரர் இஷான் கிஷன் 2 பவுண்டரிகளை அடித்த உடன் ,தேவையில்லாமல் ஒரு ஷாட் ஆடி 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய வீரர் கேமிரான் கீரின் 5 ரன்களில் கிளின் போலட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 1 ரன்னில் வெளியேற, மும்பை அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே பவர்பிளேவில் எடுத்து தடுமாறியது.

இதனையடுத்து டி20 ஆட்டத்தின் நம்பர் 1 வீரர் சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் இழந்தாலும் 20 வயதான திலக் வர்மா கவுண்டர் அட்டாக் ஷாட் ஆடி மும்ப ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் திலக் வர்மாவின் இன்னிங்ஸ் ரெய்னாவை நினைவுப்படுத்தியது போல் இருந்தது.

திலக் வர்மா 9 பவுண்டரிகளையும், 4 சிக்சர்களையும் அடிக்க 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். நெஹல் வதிரா 13 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். இதனால் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து சவாலான இலக்கை ஆர்சிபிக்கு கொடுத்துள்ளது.