Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை அணி தடுமாற்றம்.. ரூ.32 கோடிக்கு வெறும் 15 ரன்கள் தானா? காலை வாரிய டாப் 3 வீரர்கள்

மும்பை : ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 5வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும், பெங்களூரு அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 10 ஆண்டுகளாக தங்களது முதல் லீக் ஆட்டத்தில் வென்றது இல்லை.

இதனால் இம்முறையாவது மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்துள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமானது.

IPL 2023 - MI top 3 batsman out for very low scores vs RCB

இதனால் 200 ரன்கள் முதலில் பேட்டிங் செய்யும் அணி அடித்தால் கூட 2வது களமிறங்கும்அணி எளிதில் துரத்திவிடும். அந்த அளவுக்கு இது பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கம் போன்ற மைதானமாகும். இதனால் பார்மில் இல்லாத மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு இன்றைய ஆட்டம் வரப்பிராசதமாக கருதப்பட்டது.

இந்த நிலையில், தொடக்க வீரர் இஷான் கிஷன் 2 பவுண்டரிகளை அடித்த உடன் பார்ம்க்கு திரும்பிவிட்டார் என ரசிகர்கள் எதிர்பாத்தனர். ஆனால்,தேவையில்லாமல் ஒரு ஷாட் ஆடி அது அவுட் சைட் எட்ஜ் ஆகி டேர்த் மேன் திசையில் கேட்ச் ஆனார். இதனையடுத்து 17 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு கொடுத்து எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் கேமிரான் கீரின் 5 ரன்களில் கிளின் போலட் ஆனார்.

இதனையடுத்து கேப்டன் ரோகித் சர்மா வெறும் 10 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு வெறும் ஒரு ரன்னில் வெளியேறினார். இதனால் மும்பை அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தடுமாறியது.

Story first published: Sunday, April 2, 2023, 20:29 [IST]
Other articles published on Apr 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+