Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL MI vs CSK -இன்றைய ஆட்டத்தில் வெல்லப்போவது யார்? முகமது கையிப் சொன்ன பதில்

மும்பை : ஐபிஎல் 16வது சீசனில் இன்று நடைபெறும் 12 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7:30க்கு தொடங்குகிறது.இரண்டு போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் உள்ளது.

மும்பை அணி விளையாடிய முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய நெருக்கடியில் இன்று களமிறங்குகிறது. இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப்,

mohammed kaif on csk

மும்பை அணி எப்போதுமே தங்களது சொந்த மண்ணில் பலம் மிக்க அணியாக தான் இருப்பார்கள். ஆனால் சிஎஸ்கேவை எந்த மைதானத்தில் வீழ்த்துவது மிகவும் கடினமான காரியமாக தான் இருக்கும். இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

அப்போதுதான் இன்றைய ஆட்டத்தில் அவர்கள் வெற்றி பெறுவார்கள். தோனியின் பார்ம் சிஎஸ்கேவுக்கு கூடுதல் சாதகத்தை கொடுத்திருக்கிறது என்று கெயிப் பாராட்டியுள்ளார். .இதனை தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி, ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே மும்பை அணியால் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.

இரண்டு அணிகளுமே தங்களுக்குள் மோதும் போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.இன்றைய ஆட்டம் ரோகித் சர்மாவுக்கு மிக ப் பெரியதாக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரிலே இவ்விரண்டு அணிகளும் பலமாக இருப்பதாகவும் டாம் மூடி கூறியுள்ளார்.

சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற மும்பை வீரர்கள் பட்டியலில் பொலார்ட் (4) முதலிடத்திலும், ரோகித் சர்மா (3) இரண்டாவது இடத்திலும் சுரேஷ் ரெய்னா (3) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதில் இன்று ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றால் பொலார்டின் சாதனையை சமன் செய்துவிடுவார்.

Story first published: Saturday, April 8, 2023, 17:28 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+