Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஹிட்மேன்" ரோகித் சர்மாவின் சாதனை.. 16 இன்னிங்ஸ்களில் டக் அவுட்.. ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்!

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த சில போட்டிகளாக மும்பை அணி சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், முதல் பேட்டிங் செய்ய சென்னை அணி வலியுறுத்தியது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

IPL 2023: Mumbai Captain Rohit Sharma becomes the first player to gone for duck out for 16th time in IPL history

இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் அல்லாமல் ரோகித் சர்மா மூன்றாவது வீரராக களமிறங்கினார். தொடக்க வீரராக வந்த கேமரூன் க்ரீன் 6 ரன்களில் ஆட்டமிழந்ததால், ரோகித் சர்மா மீதான அழுத்தமும் அதிகரித்தது. இதையடுத்து சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் ப்புதிய யுக்தியால் ரோகித் சர்மா ஸ்கூப் ஷாட் ஆட முயன்று டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 16வது ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் ரோகித் சர்மா இதுவரை 16 முறை டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். அதேபோல் கேப்டனாக அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலிலும் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை கேப்டனாக மட்டும் ரோகித் சர்மா 11 முறை டக் அவுட்டாகியுள்ளார். இவருக்கு பின் கவுதம் கம்பீர் 10 முறை டக் அவுட்டாகி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

IPL 2023: Mumbai Captain Rohit Sharma becomes the first player to gone for duck out for 16th time in IPL history

இவருக்கு பின் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 15 முறை டக் அவுட்டாகி தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் மற்றும் மன்தீப் சிங் ஆகியோர் இரண்டாமிடத்தில் உள்ளனர். இதையடுத்து 14 முறை டக் அவுட்டாகி அம்பாதி ராயுடு மூன்றாவது இடத்திலும், 13 முறை டக் அவுட்டாகி பியூஷ் சாவ்லா, கிளென் மேக்ஸ்வெல், பார்த்திவ் படேல், ரஹானே, மணீஷ் பாண்டே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் 4வது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Saturday, May 6, 2023, 16:43 [IST]
Other articles published on May 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+