Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பலவீனமான பல்தான்ஸ் பந்துவீச்சு.. சம்பவம் செய்ய காத்திருக்கும் ரிங்கு சிங்.. காப்பாற்றுவாரா ரோகித்?

மும்பை: இன்றையப் போட்டியில் வலிமையான கொல்கத்தா அணியை எதிர்த்து மும்பை அணி சொந்த மண்ணில் களமிறங்குகிறது. கொல்கத்தா அணியின் வலிமையான பேட்டிங்கை மும்பை அணியின் பலவீனமான பந்துவீச்சாளர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடுகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் 2 போட்டிகளில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. பின்னர் டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது.

IPL 2023: Mumbai Indians to play against Kolkata Knight Riders in Wankhede Stadium

மும்பை அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா, திலக் வர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ஆனால் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், டிம் டேவிட் ஆகியோர் சொல்லிக் கொள்ளும்படியான ஃபார்மில் இல்லை. டெல்லி அணிக்கு எதிரான கடைசி போட்டியில் மட்டுமே சில ரன்களை அடித்திருந்தனர். மும்பை அணியின் பந்துவீச்சாளர்களில் மெரிடித் மற்றும் பெஹ்ரண்டார்ஃப் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால் அது கேகேஆர் அணிக்கு எதிராக வலிமை பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சொந்த மண்ணில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மோசமான தோல்வியடைந்த மும்பை அணி, இந்தப் போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி அடைந்துள்ளது. அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் அபாரமான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்கள்.

IPL 2023: Mumbai Indians to play against Kolkata Knight Riders in Wankhede Stadium

அதிலும் ஃபினிஷிங் ரோலில் ஆடும் ரிங்கு சிங் எந்த அணியின் பந்துவீச்சாளர்களையும் விளாசும் திறமையுடன் இருக்கிறார். மும்பை அணி பந்துவீச்சாளர்களை ரிங்கு சிங்கை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதே போட்டியின் இன்னொரு எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல் பேட்டிங்கில் பலமாக இருந்தாலும், சுனில் நரைனை தவிர்த்து வேறு யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பந்துவீச்சில் செயல்படவில்லை. வருண் சக்கரவர்த்தி, ஃபெர்குசன், உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் என்று அனைவரின் பந்துவீச்சிலும் ரன்கள் எக்கச்சமாக விளாசப்படுகிறது.

கேகேஆர் அணி பந்துவீச்சை சரி செய்தால், மும்பை அணியை எளிதாக வீழ்த்தலாம். இருப்பினும் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பதால், அதிக ரன்கள் விளாச வாய்ப்புகள் உள்ளது. இதனால் சேஸிங் செய்யும் அணிக்கே வெற்றிவாய்ப்பு அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இதுவரை இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்றுள்ள 32 போட்டிகளில் மும்பை 22 முறையும், கேகேஆர் 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 16, 2023, 8:29 [IST]
Other articles published on Apr 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+