For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

MI vs LSG: தவறான முடிவை எடுத்தாரா ரோகித் சர்மா? மும்பைக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. பல்தான்ஸ் பேட்டிங்

சென்னை: லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி குவாலிஃபையர் 2ல் விளையாட உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் களமிறங்கியுள்ளன.

IPL 2023: Mumbai Indians won the toss and Captain Rohit Sharma chose to bat against LSG in Elimionator

இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து ரோகித் சர்மா பேசுகையில், சென்னை அணியின் விக்கெட் கொஞ்சம் வித்தியாசமானது. இந்த பிட்ச் எப்படி மாற்றமடையும் என்று தெரியவில்லை. சென்னை பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்து இலக்கை நிர்ணயிப்பதே சிறந்தது. இந்த சீசனில் அதிக பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம். இந்தப் போட்டியில் கார்த்திக்கேயாவை நீக்கிவிட்டு ஷோக்கின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து க்ருனால் பாண்டியா பேசுகையில், அனைத்து அடிப்படைகளையும் சரி செய்துள்ளோம். அதனை களத்தில் செயல்படுத்துவதே இன்றைய இலக்காக இருக்கிறது. நாங்களும் பேட்டிங் செய்ய விரும்பினோம். இருந்தாலும் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார். இதுவரை இந்த இரு அணிகள் ஆடிய 3 போட்டிகளிலும், மூன்றிலும் லக்னோ அணி வென்றுள்ளது.

லக்னோ அணி விவரம்: பதோனி, தீபக் ஹூடா, மன்கட், ஸ்டாய்னிஸ், பூரன், க்ருனால் பாண்டியா, கவுதம், ரவி பிஷ்னாய், நவீன் உல் ஹக், யாஷ் தாக்கூர், மோசின் கான்

மும்பை அணி விவரம்: ரோகித் சர்மா, இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டன், ஷோக்கின், பியூஷ் சாவ்லா, பெஹ்ரண்டார்ஃப், ஆகாஷ் மத்வால்

Story first published: Wednesday, May 24, 2023, 19:24 [IST]
Other articles published on May 24, 2023
English summary
MI vs LSG: Mumbai Won the toss and chose to bat against Lucknow in the Eliminator of IPL 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+