Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”ஸ்வீட் எடு கொண்டாடு பழசு.. மாம்பழத்துடன் கொண்டாடு புதுசு” நவீன் உல் ஹக்கை கலாய்க்கும் எதிரணிகள்!

சென்னை: மும்பை அணியிடம் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த லக்னோ அணியையும், அந்த அணியின் நவீன் உல் ஹக்கையும் மாம்பழங்கள் மூலமாக எதிரணிகளும், ரசிகர்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

லக்னோ - பெங்களூரு அணிகள் மோதிய போது விராட் கோலி, லக்னோ அணியின் நவீன் உல் ஹக், கவுதம் கம்பீர் ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர். அதேபோல் விராட் கோலியுடன் நவீன் உல் ஹக் மோதலில் ஈடுபட்டதில் எந்த தவறும் இல்லை என்றே ரசிகர்கள் பார்த்தனர். ஆனால் லக்னோ அணியின் கேஎல் ராகுல் அழைத்த போது, அவரை மதிக்காமல் நவீன் உல் ஹக் கடந்து சென்றதால் ரசிகர்களின் கோபம் அதிகரித்தது.

IPL 2023: Mumbai Players celebrating the win in the Eliminator against LSG with Sweet Mangoes and Mocking Naveen Ul haq

இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய வீரர்களை இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பாராட்ட, இன்னொரு பக்கம் விராட் கோலி டக் அவுட்டானதை நவீன் உல் ஹக் மாம்பழங்களுடன் கொண்டாடினார். இது ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக விராட் கோலி ரசிகர்கள், நவீன் உல் ஹக் எங்கு சென்றாலும் கோலி பெயரை சொல்லி கோஷம் எழுப்பினர்.

இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நவீன் உல் ஹக் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் விக்கெட் வீழ்த்தியபின், கேஎல் ராகுல் போல் காதுகளை மூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஏற்கனவே கேகேஆர் அணி ரசிகர்களுக்கு நவீன் உல் ஹக் "சைலன்ஸ்" என்று செய்கை செய்தது சிக்கலில் சிக்கினார். தற்போது கேஎல் ராகுல் போல் கொண்டாடியதால் மும்பை அணி ரசிகர்களும் நவீன் உல் ஹக்கை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.

IPL 2023: Mumbai Players celebrating the win in the Eliminator against LSG with Sweet Mangoes and Mocking Naveen Ul haq

இந்த நிலையில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியை மும்பை அணியின் சந்தீப் வாரியர் மற்றும் விஷ்ணு வினோத் ஆகியோர் மாம்பழங்கள் வைத்து கொண்டாடியுள்ளனர். அதேபோல் நவீன் உல் ஹக் கொண்டாடியது போல் காதுகளை மூடி கொண்டாடியதோடு, வாய் மற்றும் கண்களையும் மூடி கொண்டாடியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளும் மாம்பழம் சின்னத்தில் ஸ்மைலி பதிவிட்டு லக்னோ அணியை கிண்டல் செய்துள்ளது. இதனிடையே லக்னோ அணி தனது ட்விட்டர் பக்கத்தில், Mango, Mangoes, Sweet போன்ற வார்த்தைகளை ம்யூட் செய்து வைத்துள்ளதாக புகைப்படம் பதிவிட்டு தங்களை தாங்களே கலாய்த்து கொண்டுள்ளது.

Story first published: Thursday, May 25, 2023, 9:17 [IST]
Other articles published on May 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+