Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 10 ஓவரில் 136 ரன்கள்.. ஆர்ச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப்.. மும்பைக்கு 215 ரன்கள் இலக்கு!

மொஹாலி: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லிவிங்ஸ்டனின் அதிரடியான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் சேர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. கடந்த முறை இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இதனால் சொந்த மண்ணில் அடைந்த தோல்விக்கு மும்பை அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2023: Punjab Kings set a target of 215 runs for Mumbai to win

இந்த நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணி சார்பாக பிரப்சிம்ரன் சிங் - தவான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஆட்டத்தை அதிரடியாக தொடங்கிய நிலையில் பிரப்சிம்ரன் சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து தவானுடன் ஷார்ட் இணைந்தார். இதையடுத்து தவான் அதிரடி காரணமாக பஞ்சாப் அணி 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் ஷிகர் தவான் 30 பந்துகளில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர் லிவிங்ஸ்டன் களமிறங்கினார். இதையடுத்து பஞ்சாப் அணி ரன் ரேட் குறைந்தது. 10 ஓவர்கள் முடிவில் 78 ரன்களை மட்டுமே பஞ்சாப் அணி சேர்த்திருந்தது. இதனால் அதிரடிக்கு மாற வேண்டிய சூழலுக்கு லிவிங்ஸ்டன் தள்ளப்பட்டார். 11வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி அசத்தினார். தொடர்ந்து ஷார்ட் 27 ரன்களில் ஆட்டமிழக்க, திடீரென ஜித்தேஷ் சர்மா களமிறக்கப்பட்டார்.

IPL 2023: Punjab Kings set a target of 215 runs for Mumbai to win

லிவிங்ஸ்டன் - ஜித்தேஷ் சர்மா இணை சேர்ந்து மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. ஆர்ச்சர் வீசிய 13வது ஓவரில் மட்டும் ஜித்தேஷ் சர்மா 4 பவுண்டரிகளை விளாசி அதிரடியை தொடங்கினார். மறுபக்கம் அர்ஷத் கான் பந்துவீச்சில் மூன்று பவுண்டரியை விளாசி லிவிங்ஸ்டன் அசத்தினார். இதனால் 15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 145 ரன்களை எட்டியது. இதையடுத்து அதிரடி வீரர் லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் அரைசதம் அடிக்க, கியரை அடுத்த கட்டத்திற்கு மாற்றினார்.

ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி லிவிங்ஸ்டன் மிரள வைக்க, அந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் சேர்க்கப்பட்டது. 19 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 205 ரன்களை எட்டியது. இதையடுத்து கடைசி ஓவரை வீச அறிமுக வீரர் ஆகாஷ் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 9 ரன்கள் எடுக்கப்பட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 82 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 27 பந்துகளில் 49 ரன்களும் விளாசினார்.

Story first published: Wednesday, May 3, 2023, 21:31 [IST]
Other articles published on May 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+