Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Who won the yesterday match: விராட் கோலியின் சிக்சர் மழை.. மீண்டும் மும்பைக்கு போச்சா!

பெங்களூரு : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி தங்களது முதல் போட்டியில் மும்பை அணியை பந்தாடியது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி அணி தங்களது சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்திற்கு வந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசியது.

இதனையடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 10 ரன்களிலும், ரோகித் சர்மா 1 ரன்னிலும், கேமிரான் கிரீன் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 15 ரன்களில் வெளியேறினார். எனினும் மும்பை அணியின் 20 வயது இளம் வீரர் திலக் வர்மா அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார்.

IPL 2023 - RCB stuns Mumbai indians by brilliant innings from kohli and du plessis

இதனையடுத்து 20 ஓவர் முடிவில் மும்பை அணி 171 ரன்கள் எடுத்துது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி, டுபிளசிஸ் ஆகியோர் மைதானத்தின் 4 பக்கத்திலும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். மும்பை அணியில் ஆர்சத் கான், கேமிரான் கிரீன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் 33 ரன்கள் விட்டு கொடுத்தார்.

IPL 2023 - RCB stuns Mumbai indians by brilliant innings from kohli and du plessis

மும்பை பந்துவீச்சாளர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் ரோகித் சர்மா திணறினார். சிறப்பாக விளையாடிய டுபிளசிஸ் 43 பந்தில் 73 ரன்கள் எடுக்க, இதில் 6 சிக்சர்களும், 5 சிக்சர்களும் அடங்கும். விராட் கோலி டக் அவுட்டாக, மறுபுறம் விராட் கோலி 49 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் ஆர்சிபி அணி 17.2 ஓவர் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, April 2, 2023, 23:28 [IST]
Other articles published on Apr 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+